மேலும்

எனக்கு எதிராக மகிந்த வாக்களிக்கமாட்டார் – சரத் பொன்சேகா

sarath fonsekaநாடாளுமன்றத்தில் கூட்டு எதிரணியினர் தனக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டு வந்தால், சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச நிச்சயமாக அதற்கு ஆதரவாக வாக்களிக்கமாட்டார் என்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

“அனைத்துலக நீதிப் பொறிமுறை ஒன்றை உருவாக்குவதாக, ஐ.நா பொது்சசெயலர் பான் கீ மூனுக்கு இணக்கம் தெரிவித்தவர் முன்னாள் அதிபர்  மகிந்த ராஜபக்ச தான்.

நான் அனைத்துலக நீதிமன்றத்தைப் பரிந்துரை செய்யவில்லை.  அதற்குக் கீழாக, உள்நாட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

2 இலட்சத்துக்கும் அதிகமான இராணுவத்தினர் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும்.

இந்தச் சூழலில், எப்படி முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச எப்படி எனக்கு எதிராக கை உயர்த்த முடியும்?

எந்த நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்கொள்வதற்கும் நான் தயாராக இருக்கிறேன்.

நான் சவால்களை விரும்புகிறேன். சவால்கள் வரும் போது,  என்ன நடக்கிறது என்று பார்த்துக் கொள்ளலாம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *