மேலும்

சம்பந்தனைப் பாராட்டிய அமெரிக்காவின் பதில் உதவி இராஜாங்கச் செயலர்

alice wells- TNA (1)பிரதான கொள்கையில் நீங்கள் உறுதியாக இருக்கின்றீர்கள்  என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான பதில் உதவிச் செயலர் அலிஸ் வெல்ஸ்,  பாராட்டியுள்ளார்.

சிறிலங்கா வந்திருந்த அலிஸ் வெல்ஸ் நேற்றுக்காலை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் தமிழ்த தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார்.

இதன்போது, “நீங்கள் உங்களின் பிரதான கொள்கையில் உறுதியாக இருக்கின்றீர்கள். இது மிகப்பெரும் பலமாகும்.

இவ்வாறு பிரதான கொள்கையில் உறுதியாக இருக்கும் ஒருவரை எனது வாழ்நாளில் நேரில் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்ததையிட்டு, பெருமையடைகின்றேன் ” என்று தெரிவித்துள்ளார்.

alice wells- TNA (1)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *