மேலும்

மாதம்: August 2017

மைத்திரி- ரணில் இணைந்து செயற்பட வேண்டும் – சம்பந்தன்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் நாட்டுக்காக, தொடர்ந்தும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

சீனாவிடம் அம்பாந்தோட்டை – இந்தியா கவலைப்படுவது ஏன்?

துறைமுகங்களைக் கட்டுப்படுத்தும் சீன அரசிற்குச் சொந்தமான சீன மேர்ச்சன்ட்ஸ் போட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கை இந்தியப் பாதுகாப்பு ஆய்வாளர்களால் ஆராயப்பட வேண்டிய ஒன்றாகும்.

சீன கடற்படையின் பாரிய மிதக்கும் மருத்துவமனை சிறிலங்கா வருகிறது

சீன கடற்படையின் மிக நவீனமான மருத்துவமனைக் கப்பலான, ஆர்க் பீ்ஸ்  நல்லெண்ணப் பயணமாக நாளை மறுநாள் சிறிலங்காவுக்கு வரவுள்ளது. இந்தக் கப்பல் எதிர்வரும் 9ஆம் நாள் வரை கொழும்பு துறைமுகத்தில் தரித்து நிற்கும் என்று சீன தூதரகம் அறிவித்துள்ளது.

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை முன்வைத்துள்ளனர்.

அம்பாந்தோட்டை உடன்பாடு மீதான விவாதத்தை குழப்பிய இராஜதந்திர தூதரகம் – சிறிலங்கா அரசு

அம்பாந்தோட்டை துறைமுக உடன்பாடு தொடர்பாக நாடாளுமன்றத்தில் நடக்கவிருந்த விவாதம் குழப்பப்பட்டதன் பின்னணியில், சக்திவாய்ந்த நாடு ஒன்றின் தூதரகமே இருந்தது என்று சிறிலங்கா அரசாங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

கொக்குவில் வாள்வெட்டு – மேலும் இரண்டு இளைஞர்கள் கைது

கொக்குவில் பகுதியில் கடந்த மாதம் 30 ஆம் நாள் சிறிலங்கா  காவல்துறையினர் இருவர் மீது வாளால் வெட்டி தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக மேலும் இரண்டு பேரைக் கைது செய்திருப்பதாக சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.

வடக்கின் மீது கண்வைத்துள்ள அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர்

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரக பாதுகாப்பு ஆலோசகராக அண்மையில் பொறுப்பேற்றுள்ள லெப்.கேணல் டக்ளஸ் ஹெஸ், முதற்கட்டமாக வடக்கு மாகாணத்தின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக ஆராய்ந்துள்ளார்.

‘சயுரால’ போர்க்கப்பலை இயக்கி வைத்தார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா கடற்படைக்காக இந்தியாவிடம் இருந்து புதிதாகக் கொள்வனவு செய்யப்பட்ட ‘சயுரால’ என்ற ஆழ்கடல் ரோந்துக் கப்பலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று அதிகாரபூர்வமாக ஆணையிட்டு இயக்கி வைத்தார்.

சிறிலங்கா இராணுவத்தை ஆய்வு செய்ய வந்தது ஐ.நா நிபுணர் குழு

ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றுவதற்காக மாலிக்கு அனுப்புவதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ள சிறிலங்கா படையினர் மற்றும் அவர்களின் ஆயுதங்கள் மற்றும் கருவிகளை மதிப்பீடு செய்வதற்கும், ஆய்வு செய்வதற்கும், ஐ.நா குழுவொன்று சிறிலங்கா வந்துள்ளது.

கிழக்கு கொள்கலன் முனையம் இந்தியாவுக்கு இல்லை – கைவிரித்தது சிறிலங்கா

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை தனியார் மயப்படுத்தவோ, பொதுத்துறை மற்றும் தனியார்துறை கூட்டுமுயற்சியாக அபிவிருத்தி செய்யவோ போவதில்லை என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.