மேலும்

அம்பாந்தோட்டை உடன்பாடு மீதான விவாதத்தை குழப்பிய இராஜதந்திர தூதரகம் – சிறிலங்கா அரசு

parliament-clashஅம்பாந்தோட்டை துறைமுக உடன்பாடு தொடர்பாக நாடாளுமன்றத்தில் நடக்கவிருந்த விவாதம் குழப்பப்பட்டதன் பின்னணியில், சக்திவாய்ந்த நாடு ஒன்றின் தூதரகமே இருந்தது என்று சிறிலங்கா அரசாங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

கொழும்பில் நேற்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த அமைச்சரவையின் இணைப் பேச்சாளர் தயாசிறி ஜெயசேகர இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

அம்பாந்தோட்டை துறைமுக உடன்பாட்டின் வரைவு ஆவணம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, கடந்த வெள்ளிக்கிழமை விவாதம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

எனினும், கூட்டு எதிரணியினர் அன்று நாடாளுமன்றத்தில் குழப்பம் விளைவித்ததால், விவாதம் நடத்தப்படவில்லை.

இதனால், நாடாளுமன்ற விவாதம் நடத்தப்படாமலேயே கடந்த சனிக்கிழமை சீன நிறுவனத்துடன் உடன்பாடு கையெழுத்திடப்பட்டது.

இதுகுறித்து நேற்று செய்தியாளர்களிடம் தகவல் வெளியிட்ட அமைச்சரவை இணைப் பேச்சாளர் தயாசிறி ஜெயசேகர,

“உடன்பாட்டில் திருத்தங்களைச் செய்வதற்கான வாய்ப்புகளை கூட்டு எதிரணியினர் தவறவிட்டு விட்டனர்.

குறிப்பிட்ட ஒரு வெளிநாட்டு  இராஜதந்திரத் தூதரகத்தில் இருந்து கூட்டு எதிரணியின் உறுப்பினர் ஒருவருக்கு வந்த தொலைபேசி அழைப்பை அடுத்தே, எல்லா குழப்பங்களும் ஆரம்பமானது.

இதனால், திருத்தங்கள் ஏதும் செய்யப்படாமலேயே உடன்பாடு கையெழுத்திடப்பட்டது” என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *