மேலும்

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை

ravi-karunanayakeசிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை முன்வைத்துள்ளனர்.

கூட்டு எதிரணியைச் சேர்ந்த 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை, பந்துல குணவர்த்தன தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்களால் நேற்று நாடாளுமன்ற செயலரிடம் கையாளிக்கப்பட்டது.

இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை சபாநாயகர் நாடாளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் சேர்த்துக் கொண்ட பின்னர், அவையில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருக்கும், முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் அர்ஜூன மகேந்திரனின், மருமகனான, வர்த்தகர் அர்ஜூன் அலோசியசுடன் வர்த்தக தொடர்புகளை வைத்திருந்தார் என்று வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க  மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நேற்று முன்தினம் அதிபர் ஆணைக்குழு முன்பாக சாட்சியமளித்த ரவி கருணாநாயக்க தனக்கு எதுவும்  தெரியாது என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *