மேலும்

மாதம்: August 2017

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு சிறிலங்காவுக்கு அமெரிக்கா முழு ஆதரவு

புதிய அரசியலமைப்பை வரையும் சிறிலங்கா அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு அமெரிக்க அரசாங்கம் முழுமையான ஆதரவையும் வழங்கும் என்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்ட அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் உறுதி அளித்துள்ளனர்.

மேலும் 6 மாத சேவை நீடிப்பைக் கோருகிறார் சிறிலங்கா கடற்படைத் தளபதி

சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன மேலும் ஆறு மாத சேவை நீடிப்பை வழங்குமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் கோரியுள்ளார் என்று பாதுகாப்பு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

யாழ். குடாநாட்டில் சிறிலங்கா கடற்படை கொமாண்டோக்கள் களமிறக்கம்

யாழ். குடாநாட்டில் கடலோரக் காவல்படைக்கு உதவியாக, சிறிலங்கா கடற்படையின் சிறப்பு படகுப் படையணி கொமாண்டோக்களும் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று சிறிலங்கா பாதுகாப்பு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

திலக் மாரப்பனவுக்கு பதில் வெளிவிவகார அமைச்சர் பதவி?

சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் பதவியில் இருந்து ரவி கருணாநாயக்க நேற்று விலகியதை அடுத்து, பதில் வெளிவிவகார அமைச்சராக திலக் மாரப்பன நியமிக்கப்படலாம் என்று கொழும்பு அரசியல் வட்டாரங்களில் ஊகங்கள் நிலவுகின்றன.

குடாநாட்டில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரால் 87 பேர் கைது

யாழ். குடாநாட்டில் சிறிலங்காவின் சிறப்பு அதிரடிப்படையினரும் காவல்துறையினரும் இணைந்து முன்னெடுத்த சுற்றிவளைப்பு தேடுதல்களில் இதுவரை 87 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ரவி கருணாநாயக்கவின் முடிவை சம்பந்தன் வரவேற்பு

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதற்கு ரவி கருணாநாயக்க எடுத்துள்ள முடிவை எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் வரவேற்றுள்ளார்.

அமெரிக்க- சிறிலங்கா உறவுகளை உச்சத்துக்கு கொண்டு செல்வேன் – பிரசாத் காரியவசம்

சிறிலங்காவின் வெளிவிவகாரச் செயலர் பதவியின் மூலம் தாம் அமெரிக்கா- சிறிலங்கா இடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்தவுள்ளதாக, அமெரிக்காவுக்கான சிறிலங்கா தூதுவர் பதவியில் இருந்து விலகும் பிரசாத் காரியவசம் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க பதவி விலகினார்

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க பதவியில் இருந்து விலகுவதாக நாடாளுமன்றத்தில் இன்று அறிவித்துள்ளார்.

மத்தல விமான நிலையம் 40 ஆண்டுகள் இந்தியா வசமாகிறது

மத்தல அனைத்துலக விமான நிலையத்தை இந்திய நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்குவதற்கு சிறிலங்கா அமைச்சரவையிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.

கொக்குவில் வாள்வெட்டு – மற்றொருவரும் கைது

கொக்குவிலில் இரண்டு சிறிலங்கா காவல்துறையினர் மீது வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்ட குழுவைச் சேர்ந்த மற்றொருவரையும் நேற்று கைது செய்திருப்பதாக சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.