மேலும்

சிறிலங்கா வான்பரப்பில் நுழைந்து தேடுதல் நடத்திய இந்திய கடற்படையின் கண்காணிப்பு விமானம்

இந்தியக் கடற்படையின் நீண்டதூர கண்காணிப்பு விமானம் சிறிலங்கா எல்லைக்குள் நுழைந்து  தேடுதல்களை நடத்தியதாக இந்தியக் கடற்படை தகவல் வெளியிட்டுள்ளது.

கேரளாவின் கொல்லம் கடற்பகுதியில் கடந்த சனிக்கிழமை இந்திய மீன்பிடிப் படகு ஒன்றை மோதிவிட்டு கப்பல் ஒன்று தப்பிச் சென்றிருந்தது.

தென்திசையில் தப்பிச் சென்ற அந்தக் கப்பல் ஹொங்கொங்கில் பதிவு செய்யப்பட்ட  Ksl Ang Yang என்ற கப்பலாக இருக்கலாம் என்று இந்திய கடற்படை வட்டாரங்கள் தெரிவித்தன.

கொச்சியில் இருந்து 400 கடல் மைல் தொலைவில் என்பதால், டோனியர் விமானங்களின் எல்லைக்கு அப்பாற்பட்டது.

எனவே, ரக நீண்டதூர கண்காணிப்பு விமானம் ஒன்று தேடுதலுக்காக அனுப்பப்பட்டது.

சிறிலங்கா வான்பரப்பில் நுழைந்து தேடுதல்கள் நடத்தப்பட்டன. இதற்காக சிறிலங்கா அதிகாரிகளிடம் அனுமதி பெறப்பட்டது. என்றும் இந்திய கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *