மேலும்

ரஷ்ய பாதுகாப்பு உயர் அதிகாரிகளுடன் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் சந்திப்பு

kapila russia (1)சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கபில வைத்தியரத்ன, ரஷ்யாவின் பிரதி பாதுகாப்பு அமைச்சர் அலெக்சாண்டர் போமின் தலைமையிலான உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகளைச் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.

ரஷ்யாவில் ‘இராணுவம் -2017 எக்ஸ்போ’ என்ற இராணுவ தளபாடக் கண்காட்சி கடந்த 22 ஆம் நாள் ஆரம்பமாகியது.

இன்றுடன் நிறைவடையும் இந்தக் கண்காட்சியில் ஆரம்ப விழாவில் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கபில வைத்தியரத்ன தலைமையிலான குழுவினர் பங்கேற்றிருந்தனர்.

kapila russia (1)

kapila russia (2)

இந்த கண்காட்சியின் ஒரு பக்க நிகழ்வாக, ரஷ்யாவின் பிரதி பாதுகாப்பு அமைச்சர் அலெக்சாண்டர் போமின் தலைமையிலான உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகளைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

அத்துடன், இராணுவ, தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான சமஷ்டி சேவைகள் அதிகாரிகளையும் சிறிலங்கா பாதுகாப்பு செயலர் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *