மேலும்

மன்னார் கடல் படுக்கை எண்ணெய் அகழ்வு – இந்தியா, சிங்கப்பூர் போட்டி

mannar_basinமன்னார் கடல்படுக்கையில், எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வில் இந்தியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் ஆர்வம் காட்டி வருவதாக, பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி செயலகத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம், சாலிய விக்கிரமசூரிய தெரிவித்துள்ளார்.

“மன்னார் கடல் படுக்கையில் உள்ள 13 துண்டங்களில், 8 துண்டங்களில் அகழ்வை மேற்கொள்வதற்கு, 8 வெளிநாட்டு நிறுவனங்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளன.

இது வெற்றியளித்தால் சிறிலங்காவுக்கு நன்மையாக இருக்கும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கெய்ன் இந்தியா நிறுவனம் மன்னார் கடல் படுக்கையில், 2ஆவது துண்டத்தில் எண்ணெய் அகழ்வு முயற்சிகளில் ஈடுபட்டிருந்தது.

எனினும், உலகளாவிய எரிபொருள் விலைச் சரிவை அடுத்து, இந்த துண்டத்தில் எரிவாயு அகழ்வு முயற்சியில் இருந்து விலகுவதாக, 2015ஆம் ஆண்டு கெய்ன் இந்தியா நிறுவனம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *