மேலும்

பிரிகேடியர் தேசப்பிரிய குணவர்த்தனவை விளக்கமறியலில் வைக்க கம்பகா நீதிமன்றம் உத்தரவு

Brigadier Deshapriya Gunawardeneரதுபஸ்வெலவில் சுத்தமான குடிநீர் கேட்டுப் போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்ட பிரிகேடியர் தேசப்பிரிய குணவர்த்தனவை விளக்கமறியலில் வைக்க கம்பகா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2013 ஆம் ஆண்டு போராட்டம் நடத்திய மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்காக நேற்று குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு பிரிகேடியர் தேசப்பிரிய குணவர்த்தன அழைக்கப்பட்டிருந்தார்.

விசாரணைகளை அடுத்து கைது செய்யப்படட அவர் நேற்று மாலை கம்பகா பிரதம நீதிவான் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார். அப்போது அவரை எதிர்வரும் மே 31ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் ருவன்பத்திரன உத்தரவிட்டார்.

பிரிகேடியர் தேசப்பிரிய குணவர்த்தன சிறிலங்கா இராணுவத்தின் காலாட்படை பிரதி பணிப்பாளராக பணியாற்றிய வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *