மேலும்

சிறிலங்காவைக் கண்காணிக்க வருகிறார் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்

Bill Johnson - prasadநல்லிணக்கச் செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடுவதற்கும், கண்காணிப்பதற்கும், அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் பில் ஜோன்சன் விரைவில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

பில் ஜோன்சன் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்வதற்கு முன்னர், வொசிங்டனில் உள்ள சிறிலங்கா தூதுவர் பிரசாத் காரியவசத்தை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

இதுகுறித்து தமது கீச்சகப் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரசாத் காரியவசம், பில் ஜோன்சனின் பயணம், சிறிலங்காவின் தற்போதைய நல்லிணக்க செயல்முறைகளுக்கு ஆதரவாக இருக்கும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Bill Johnson - prasad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *