மேலும்

மகிந்தவின் குடியுரிமையைப் பறிக்கும் முடிவு எடுக்கப்படவில்லை – ராஜித சேனாரத்ன

rajitha senaratneசிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் குடியுரிமையைப் பறிக்கும் முடிவு எதையும், சிறிலங்கா அரசாங்கம் எடுக்கவில்லை என்று அமைச்சர ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

‘இது தொடர்பாக பரப்பப்படும் வதந்திகள் அடிப்படையற்றவையாகும்.

பாரிய குற்றங்கள் நடந்த மிக் கொள்வனவு, டுபாய் வங்கிக் கணக்குகள், வசீம் தாஜுதீன் படுகொலை என்பன குறித்த விசாரணைகள் மெதுவாகவே நடக்கின்றன.

சிறிய விவகாரங்கள் குறித்தே விசாரணைகள் நடத்தப்படுகின்றன. பாரிய குற்றங்கள் குறித்த விசாரணைகள் தாமதப்படுத்தப்படுகின்றன.

சில அதிகாரிகள் தமது கடமையை சரியாக செய்வதில்லை. அவர்களுக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *