மேலும்

மலேரியா ஒழிக்கப்பட்ட சிறிலங்காவில் ஆபத்தான நோய்க்காவி நுளம்பு – மன்னாரில் கண்டுபிடிப்பு

Anopheles Stephensiமலேரியாவை முற்றாக ஒழித்த நாடாக சிறிலங்காவை உலக சுகாதார நிறுவனம் பிரகடனப்படுத்தியுள்ள நிலையில், அழிப்பதற்கு கடினமான, மலேரியா நோயைப் பரப்பும் புதிய நுளம்பு வகை ஒன்று மன்னாரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தலைமன்னார், பேசாலைப் பகுதியில் இருந்த கிணறுகளில் இருந்து இந்த நுளம்பு வகை கண்டறியப்பட்டுள்ளதாக, மலேரியா எதிர்ப்புத் திட்டத்தின் பணிப்பாளர் கலாநிதி ஹேமபால ஹேரத் தெரிவித்துள்ளார்.

இந்த நுளம்பின், விஞ்ஞானப் பெயர், அனோபிலெஸ் ஸ்டீபென்சி (Anopheles Stephens) ஆகும். இந்தியாவில் மலேரியா நோயைக் காவும் பிரதான நுளம்பு வகை இதுவேயாகும். ஆரம்பத்தில் வட இந்தியாவிலேயே இது கண்டறியப்பட்டது. பின்னர் குறுகிய காலத்திலேயே, தென்னிந்தியாவுக்கும் பரவி விட்டது.

இந்த வகையிலேயே சிறிலங்காவுக்கும் பரவியிருக்க வாய்ப்புகள் உள்ளன.

Anopheles Stephensi

அனோபிலெஸ் ஸ்டீபென்சி நுளம்பு

இந்த புதிய இன நுளம்புகளின் முட்டைகள் ஆய்வுக்காக கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. இந்த துறையில் அனுபவம் மிக்க இந்தியாவின் மூத்த விஞ்ஞானிகளின் உதவி கோரப்படவுள்ளது” என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *