மேலும்

இந்தியாவின் நலன்களுக்கு எதிரான செயற்படோம் – சிறிலங்கா கடற்படைத் தளபதி வாக்குறுதி

ravi-lanbaஇந்தியாவின் நலன்களுக்கு எதிராக சிறிலங்காவின் தரையிலோ, கடலிலோ எந்தச் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படாது என்று, சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜயகுணவர்த்தன உறுதியளித்துள்ளார்.

இந்தியாவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள அவர், நேற்று புதுடெல்லியில் இந்தியக் கடற்படைத் தளபதி அட்மிரல் சுனில் லன்பாவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

இதன் பின்னர் ஊடகவியலாளர்களைச் சந்தித்த சிறிலங்கா கடற்படைத் தளபதியிடம், சீன நீர்மூழ்கிகள், கொழும்பு துறைமுகத்தில் தரித்துச் சென்றமை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த சிறிலங்கா கடற்படைத் தளபதி, ‘சிறிலங்காவின் தரையிலோ, அதனைச் சுற்றியுள்ள கடலிலோ இந்தியாவின் நலன்களுக்கு எதிரான எந்தச் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படாது என்று இந்தியாவுக்கு உறுதியளிக்கிறோம்.

ravi-lanba

சிறிலங்காவில் சீனாவின் தலையீடுகள் முற்றிலும் பொருளாதார காரணங்களுக்கானதே.

சீனாவின் முதலீட்டில், அமைக்கப்படும் கொழும்பு நிதி நகரத்தின் பாதுகாப்பு சிறிலங்கா கடற்படை வசமே இருக்கும். சீனர்களின் பாதுகாப்பில் அது இருக்கும் என்று பரப்பப்படும் தகவல்களில் உண்மையில்லை.” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *