மேலும்

மாதம்: October 2016

மனித உரிமைகள் விவகாரத்தில் அமெரிக்காவின் கரிசனைகள் தொடரும் – ஜோன் கெரி

அவசரமான- மோசமான மனித உரிமைகள் கரிசனைகள் குறித்து அனைத்துலக சமூகத்துடன் இணைந்து பணியாற்றப் போவதாகவும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையைப் வலுப்படுத்தப் போவதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இந்திய நாடாளுமன்றத்துக்கு வருகிறது அகதிகளுக்கு புகலிடம் அளிக்கும் சட்டமூலம்

அகதிகளுக்குப் புகலிடம் அளிப்பது தொடர்பான சட்டமூலம் இந்திய நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடரில் முன்வைக்கப்படும் என்று புதுடெல்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அம்பாந்தோட்டை துறைமுகத்தைக் கைப்பற்றுகிறது சீனா

நாட்டின் கடன் சுமையைக் குறைப்பதற்காக அம்பாந்தோட்டை துறைமுகத்தின் 80 வீத உரிமை சீன நிறுவனத்துக்கு விற்கப்படவுள்ளதாக, சிறிலங்கா நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

வடக்கு நிலைமைகளை அவதானிக்க அமெரிக்க பிரதித் தூதுவர் யாழ். பயணம் – ஆயரைச் சந்திப்பு

யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொண்டிருந்த அமெரிக்கப் பிரதித் தூதுவர் ரொபேர்ட் ஹில்டன் நேற்று யாழ். ஆயர் கலாநிதி ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு அமெரிக்கா, பிரித்தானியா, சீனா மீண்டும் தெரிவு – ரஷ்யா தோல்வி

ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கான 14 புதிய உறுப்பு நாடுகளைத் தெரிவு செய்வதற்காக நேற்று ஐ.நா பொதுச்சபையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், அமெரிக்கா, பிரித்தானியா, சீனா உள்ளிட்ட நாடுகள் வெற்றி பெற்றுள்ளன.

ஆனையிறவில் புதிய தொடருந்து நிலையம்

ஆனையிறவில் புதிய தொடருந்து நிலையம் நேற்று திறந்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணத்துக்கான தொடருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் கழித்து, இந்த தொடருந்து நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

200 இராணுவப் புலனாய்வு அதிகாரிகளிடம் விசாரணை

லசந்த விக்கிரமதுங்கவைப் படுகொலை செய்ததாக கடிதம் எழுதி வைத்து விட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் அதிகாரி சார்ஜன்ட் மேஜர் எதிரிசிங்க ஜெயமான்னேயுடன் பணியாற்றிய இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் விசாரணை செய்யப்படவுள்ளனர்.

தேசிய பாதுகாப்பை விட்டுக் கொடுக்க முடியாது – சிறிலங்கா அதிபர்

அரசசார்பற்ற நிறுவனங்களைத் திருப்திப்படுத்துவதற்காக தேசிய பாதுகாப்பை விட்டுக் கொடுக்க முடியாது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

லசந்த கொலையில் சம்பந்தப்பட்ட புலனாய்வு அதிகாரி பிணையில் விடுவிப்பு

சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறிலங்கா இராணுவப் புலனாய்வு அதிகாரி பிரேம் ஆனந்த உடலகம நேற்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

சிறிலங்கா இராணுவத் தளபதியின் புதுடெல்லிக்கான இரகசியப் பயணம்

சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா இந்தியாவுக்கான இரண்டு நாள் பயணம் ஒன்றை மேற்கொண்டு, இந்தியாவின் முப்படைகளின் தளபதிகளையும் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.