மேலும்

சிறிலங்கா இராணுவத் தளபதியின் புதுடெல்லிக்கான இரகசியப் பயணம்

sla-commander-new-delhi-1சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா இந்தியாவுக்கான இரண்டு நாள் பயணம் ஒன்றை மேற்கொண்டு, இந்தியாவின் முப்படைகளின் தளபதிகளையும் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

இந்திய இராணுவத் தளபதியின் அழைப்பின் பேரில், கடந்த 24ஆம், 25ஆஆம் நாள்களில் சிறிலங்கா இராணுவத் தளபதி இந்தியாவுக்கான பயணத்தை மேற்கொண்டிருந்தார்.

கடந்த 24ஆம் நாள் புதுடெல்லி செக்றிருந்த சிறிலங்கா இராணுவத் தளபதிக்கு இந்திய இராணுவத் தலைமையகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சு அமைந்துள்ள சவுத் புளொக்கில், அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

இதையடுத்து இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் தல்பீர் சிங்குடன் சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் கிரிசாந்த டி சில்வா பேச்சுக்களை நடத்தினார்.

sla-commander-new-delhi-1sla-commander-new-delhi-2sla-commander-new-delhi-3sla-commander-new-delhi-4

அதன் பின்னர், இந்தியக் கடற்படைத் தளபதி அட்மிரல் சுனில் லம்பாவையும், இந்திய விமானப்படைத் தளபதி எயர் மார்ஷல் பி.எஸ். தானோவையும் அவர் தனித்தனியாகச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

மறுநாள், இந்திய இராணுவத்தின் இராணுவ பொறியியல் கல்லூரிக்கும், தேசிய பாதுகாப்பு அகடமிக்கும் சென்ற சிறிலங்கா இராணுவத் தளபதி, அங்கு பயிற்சி பெற்று வரும் சிறிலங்கா படையினரையும் சந்தித்துள்ளார்.

சிறிலங்கா இராணுவத் தளபதியுடன் இராணுவ செயலர் மேஜர் ஜெனரல் ஜனக வல்கமவும் புதுடெல்லி சென்றிருந்தார்.

சிறிலங்கா இராணுவத் தளபதியின் இந்தியப் பயணம் தொடர்பான தகவல்கள் ஏதும் முன்கூட்டியே ஊடகங்களுக்குத் தெரியப்படுத்தப்பட்டிருக்கவில்லை. அவர் நாடு திரும்பி இரண்டு நாட்கள் கழித்தே சிறிலங்கா இராணுவத் தலைமையகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *