மேலும்

மனித உரிமைகள் விவகாரத்தில் அமெரிக்காவின் கரிசனைகள் தொடரும் – ஜோன் கெரி

john-kerry-pressஅவசரமான- மோசமான மனித உரிமைகள் கரிசனைகள் குறித்து அனைத்துலக சமூகத்துடன் இணைந்து பணியாற்றப் போவதாகவும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையைப் வலுப்படுத்தப் போவதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு அமெரிக்கா மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளமை தொடர்பாக அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர், ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு அமெரிக்காவை மீண்டும் தெரிவு செய்தமைக்காக ஐ.நா பொதுச்சபைக்கு அவர் நன்றியைத் தெரிவித்துள்ளார்.

2009ஆம் ஆண்டு ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா இணைந்து கொண்ட பின்னர், சிரியா, வடகொரியா, புரூண்டி தொடர்பான விசாரணை ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டதுடன், சிறிலங்கா,ஈரான், பர்மா தொடர்பான குறிப்பிடத்தக்க தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன என்பதையும் அவர் நினைவுபடுத்தியுள்ளார்.

அதேவேளை, உலகம் முழுவதிலும் மனித உரிமைகளை ஊக்கவிக்க அமெரிக்கா தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கும் என்று ஜெனிவாவில் உள்ள ஐ.நாவுக்கான அமெரிக்க தூதுவர் கெய்த் ஹாப்பர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *