ஜேர்மனியின் மியூனிச் நகரில் தீவிரவாதத் தாக்குதல் – 10 பேர் பலி
ஜேர்மனியின் மியூனிச் நகரில் உள்ள ஒலிம்பியா வணிக வளாகத்தில் நேற்றுமாலை நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில், 10 பேர் கொல்லப்பட்டதாக ஜேர்மனிய காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
ஜேர்மனியின் மியூனிச் நகரில் உள்ள ஒலிம்பியா வணிக வளாகத்தில் நேற்றுமாலை நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில், 10 பேர் கொல்லப்பட்டதாக ஜேர்மனிய காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
மத்தல விமான நிலையம், மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகம் ஆகியவற்றின் பெயர்ப் பலகைகளில் உள்ள மகிந்த ராஜபக்சவின் பெயரை நீக்க வேண்டும் என்று விடுக்கப்பட்ட கோரிக்கைகளை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிராகரித்துள்ளார்.
யாழ். பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கிடையில் கடந்தவாரம் இடம்பெற்ற மோதல்கள் தொடர்பாக, அமைக்கப்பட்டுள்ள விசாரணைக் குழு சமர்ப்பிக்கும் அறிக்கையின் பரிந்துரைகளின் அடிப்படையிலேயே எதிர்கால நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்கப்படும் என்று சிறிலங்காவின் உயர் கல்வி அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
தமது பிள்ளைகளுக்கு அரசாங்கம் பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்கும் வரை, அவர்களை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு அனுப்பப் போவதில்லை என்று, சிங்கள மாணவர்களின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
சிறிலங்காவிற்கு இவ்வாண்டு அதிகளவில் வெளிநாட்டு உதவியை வழங்கிய சீனா, தொடர்ந்தும் சிறிலங்காவின் அபிவிருத்திக்கு ‘முழுமையான ஒத்துழைப்பை’ வழங்குவேன் என உறுதியளித்துள்ளது. இந்தியாவின் அதிருப்தி வலுவடைந்து வரும் நிலையிலும் சீனா இவ்வாறானதொரு உறுதியை வழங்கியுள்ளது.
பாதுகாப்பு விவகாரங்களை ஆய்வு செய்வதற்காக சிந்தனைக் குழாம் ஒன்றை உள்ளடக்கிய ஆய்வு அமைப்பு ஒன்றை சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு உருவாக்கியுள்ளது.
இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் எதிர்பார்க்கப்பட்டதை விடவும், குறைவாகவே வரி வருமானம் கிடைத்திருப்பதாக, சிறிலங்காவின் நிதி அமைச்சர் சார்பில் நாடாளுமன்றத்தில் நேற்று சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சிறிலங்கா அரசாங்கத்தினால் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள காணாமற்போனோருக்கான பணியகம், சிறிலங்காப் படையினரைத் தண்டிப்பதற்கான ஒன்று எனக் குற்றம்சாட்டியுள்ள சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச, இதனை உருவாக்குவதற்குத் துணைபோகும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாட்டையும் படையினரையும் காட்டிக் கொடுத்ததற்குப் பொறுப்பேற்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கில், 7 சந்தேகநபர்களுக்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று பாதுகாப்பு அமைச்சுக்குச் சென்று முக்கிய கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளார்.