மேலும்

தமக்கெதிராகப் போர்க்கொடி உயர்த்தியவர்களைச் சரணடைய வைத்தார் சம்பந்தன்

sampanthan-met-small-party-leaders (1)கிளிநொச்சியில் இராணுவ முகாமுக்குள் அத்துமீறி நுழைந்த, இரா. சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து உடனடியாக விலக வேண்டும் என்று கோரி எதிர்க்கட்சித் தலைவரின் செயலகம் முன்பாக போராட்டம் நடத்திய ஏழு சிறுகட்சிகளின் தலைவர்களை, இரா. சம்பந்தன் நேற்று சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

இந்தச் சந்திப்பின் போது, கிளிநொச்சியில் என்ன நடந்தது என்பது தொடர்பாக அவர்களுக்கு சம்பந்தன் விளக்கிக் கூறினார்.

அதனை அவர்கள் ஏற்றுக் கொண்டதுடன், வடக்கு, கிழக்கில் இராணுவத்தினரால் ஆக்கரமிக்கப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகளைப் பார்வையிட தமக்கு ஏற்பாடு செய்து தருமாறும், இரா. சம்பந்தனிடம் கேட்டுக் கொண்டனர்.

அதற்குரிய ஏற்பாடுகளை செய்வதாக சம்பந்தன் வாக்குறுதி அளித்தார்.

sampanthan-met-small-party-leaders (1)sampanthan-met-small-party-leaders (2)

நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில், வடக்கு மாகாணசபையினால் முன்வைக்கப்பட்டுள்ள சமஸ்டி தீர்வு முறை குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இதன்போது, கருத்து வெளியிட்ட இரா.சம்பந்தன், சமஸ்டி என்பது பிரிவினை அல்ல என்றும், இதனை கடந்த காலங்களில் சிங்களத் தலைவர்களே முன்வைத்தனர் என்றும் குறிப்பிட்டார்.

அப்போது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள சமஸ்டி தொடர்பில் சிங்கள மக்களுக்குப் புரியும்படி விளங்கப்படுத்துங்கள். இதற்காக சிறந்த சட்டத்தரணிகளை – விரிவுரையாளர்களைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துங்கள். இதன் மூலமே இந்த விடயத்துக்குத் தீர்வு காண முடியும் என்று, சிறுகட்சிகளின் தலைவர்கள் எடுத்துக் கூறினர்.

அத்துடன், தம்மை அழைத்து உண்மை நிலையை தெளிவுபடுத்திய எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் அவர்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *