மேலும்

பாலித தேவாரப்பெருமவும், பிரசன்ன ரணவீரவுமே மோதல்களுக்கு காரணம்- விசாரணைக்குழு அறிக்கை

parliament-clashசிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற மோதல்களுக்குக் காரணமான, ஐதேக உறுப்பினர் பாலித தேவாரப்பெரும மற்றும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர் பிரசன்ன ரணவீர ஆகியோருக்கு எதிராக, கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க, விசாரணைக் குழு பரிந்துரைத்துள்ளது.

நேற்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற மோதல்களில், ஐதேக உறுப்பினர் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் பலர் சிறுகாயமடைந்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க, பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால மற்றும் நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரைக் கொண்ட குழு நேற்று சபாநாயகரால் நியமிக்கப்பட்டது.

இந்தக் குழுவினர், நேற்று நாடாளுமன்றத்தில் கைகலப்பு இடம்பெற்றபோது, எடுக்கப்பட்ட காணொளிக் காட்சிகளின் உதவியுடன் விசாரணைகளை மேற்கொண்டு, அறிக்கையை இன்று சபாநாயகரிடம் கையளித்தது.

இந்த அறிக்கையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பாலித தேவாரப்பெரும மற்றும், பிரசன்ன ரணவீர ஆகியோரே நேற்றைய சம்பவங்களுக்குக் காரணமானவர்கள் என்றும் அவர்கள் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறும் சபாநாயகருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *