மேலும்

மாதம்: April 2016

புலிகளின் பெயரில் படைஅதிகாரிகளை படுகொலை செய்த சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவு

விடுதலைப் புலிகளின் பெயரைப் பயன்படுத்தி, படைஅதிகாரிகள், மற்றும் அரசியல்வாதிகளை சிறிலங்கா இராணுவப் புலனாய்வுத்துறை படுகொலை செய்ததாக, குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணைகளில் தெரியவந்திருப்பதாக சத்ஹண்ட என்ற சிங்கள வாரஇதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

மகிந்தவின் சீனப் பயணம் ரத்தானது ஏன்? – உபுல் ஜோசப் பெர்னான்டோ

முன்னர் சீனாவின் திட்டங்கள் தொடர்பாக மகிந்த ராஜபக்ச பெருமையாகப் பேசுவார். ஆனால் இவரது அண்மைய உரைகளில் சீனா மீதான புகழாரம் காணப்படவில்லை.

கி.பி. அரவிந்தன் முதலாவது ஆண்டு நினைவேந்தல் பற்றிய ஓர் பகிர்வு – ரூபன் சிவராஜா

ஈழ விடுதலைப்போராட்ட முன்னோடி, சிந்தனையாளர், கவிஞர், எழுத்தாளர், ஊடகவியலாளர் எனத் தமிழ்ச் சூழலில் பன்முக வகிபாகம் கொண்டிருந்த கி.பி.அரவிந்தன் அவர்களின் முதலாவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 26.03.16 சனிக்கிழமை நடைபெற்றது.

சாவகச்சேரி வெடிபொருள் மீட்பு – கொழும்பில் வைத்து சந்தேகநபரிடம் விசாரணை

சாவகச்சேரியில், தற்கொலை தாக்குதல் அங்கி உள்ளிட்ட வெடிபொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ரமேஸ் எனப்படும் எட்வேட் ஜூலியன், மேலதிக விசாரணைக்காக , தீவிரவாத விசாரணைப் பிரிவினால் கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

சிறிலங்கா கடற்படையின் குற்றச்செயல்களை அம்பலப்படுத்தும், முன்னாள் புலனாய்வு அதிகாரி

சிறிலங்கா கடற்படையினரின் பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பான தகவல்களை அம்பலப்படுத்த, கடற்படையின் முன்னாள் மூத்த புலனாய்வு அதிகாரி தயாராக இருப்பதாக, சிறிலங்கா காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பிரபாகரனின் உடல் எரிக்கப்படவில்லை; புதைக்கப்பட்டது – என்கிறார் சரத் பொன்சேகா

இறுதிக்கட்டப் போரில் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் உடல், எரிக்கப்படவில்லை என்றும், அது புதைக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா.

ஐ.நா அதிகாரிகளுடன் போர்க்குற்ற விவகார அமெரிக்க நிபுணர் பேச்சு

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பூகோள குற்றவியல் நீதிக்கான பணியகத்தின் சிறப்பு இணைப்பாளர் ரொட் புச்வால்ட், இன்று கொழும்பிலுள்ள ஐ.நா அதிகாரிகளைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இப்போதைக்கு இல்லை பான் கீ மூனின் சிறிலங்கா பயணம்

ஐ.நா பொதுச் செயலர் பான் கீ மூன் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளும் திட்டம் ஏதும் தற்போதைக்கு இல்லை என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

விக்னேஸ்வரனைச் சந்தித்தார் போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் அமெரிக்க நிபுணர்

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பூகோள குற்றவியல் நீதிக்கான பணியகத்தின் சிறப்பு இணைப்பாளர் ரொட் புச்வால்ட், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

‘ஈழம்’, ‘விடுதலை’யை கைவிடுகிறது பத்மநாபா ஈபிஆர்எல்எவ் – புதிய பெயருக்குள் நுழைகிறது

பத்மநாபா ஈபிஆர்எல்எவ், தமது கட்சியின் பெயரில் உள்ள ‘ஈழம்’, ‘விடுதலை’ ஆகிய சொற்களை நீக்கவுள்ளதாக ஐஏஎன்எஸ் செய்தி ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் இன்று இதுதொடர்பான அறிவிப்பு அதிகாரபூர்வமாக வெளியிடப்படவுள்ளது.