மேலும்

மீண்டும் வெற்றிலையில் சங்கமிக்கிறது ஈபிடிபி?

Douglas_Devanandaஇனிவரும் தேர்தல்களில் கூட்டாகப் போட்டியிடுவது குறித்து, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும், ஈபிடிபி கட்சியும் பேச்சுக்களை நடத்தியிருக்கின்றன.

சிறிலங்கா அதிபரும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனையின் பேரில், கட்சியின் பொதுச்செயலர் மகிந்த அமரவீர, நட்புக் கட்சிகளுடன் பேச்சுக்களை ஆரம்பித்திருக்கிறார்.

வரும் தேர்தல்களில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து- ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கீழ் போட்டியிடுவது குறித்தே பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதன் ஒரு கட்டமாக, டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈபிடிபி குழுவுடன், பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன. கடந்த 5ஆம் நாள் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இந்தப் பேச்சுக்கள் இடம்பெற்றன.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கீழ் இணைந்து போட்டியிடுவது குறித்து நடத்தப்பட்ட பேச்சுக்கள் வெற்றியளித்துள்ளதாக, அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

விரைவில் ஈபிடிபியுடன் இன்னொரு சுற்றுப் பேச்சு நடத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்டு வந்த ஈபிடிபி, கடந்த ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமது கட்சியின் வீணைச் சின்னத்தில் போட்டியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *