மகிந்த கால கொலைகளுடன் தொடர்புடைய கப்டன் திஸ்ஸ யாழ். இராணுவ முகாமில் தடுத்து வைப்பு
மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு அணியில் இடம்பெற்றிருந்த, போது பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் சிறிலங்கா இராணுவ அதிகாரியான கப்டன் திஸ்ஸ என்று அழைக்கப்படும், கப்டன் எல்.எம்.ரி.விமலசேன யாழ்ப்பாணத்தில் உள்ள இராணுவ முகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.


