மேலும்

மாதம்: February 2016

பிரபல எழுத்தாளர் செங்கை ஆழியான் காலமானார்

ஈழத்தின் பிரபல எழுத்தாளர்களில் ஒருவரான செங்கை ஆழியான் என்று அழைக்கப்படும் கலாநிதி கந்தையா குணராசா இன்று காலமானார். உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே தனது 75 ஆவது வயதில் அவர் இயற்கை எய்தினார்.

உள்ளகப் பொறிமுறை சிறிலங்கா இராணுவத்தை இலக்கு வைக்காது – ருவான் விஜேவர்த்தன

சிறிலங்கா இராணுவம் செய்ததாக கூறப்படும் குற்றங்கள் தொடர்பாக விசாரணைகள் இடம்பெற்றாலும் அது  எந்த சந்தர்ப்பத்திலும் இராணுவத்தை இலக்குவைக்கும் பொறிமுறையாக இருக்காது என்று சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.

ரவிராஜ் கொலைக்கு கருணா குழுவுக்கு 50 மில்லியன் ரூபா கொடுத்தார் கோத்தா – நீதிமன்றில் சாட்சியம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த நடராஜா ரவிராஜைப் படுகொலை செய்வதற்கு, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச 50 மில்லியன் ரூபாவை கருணா குழுவுக்கு வழங்கியிருந்தார் என்று சாட்சி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஐ.நாவின் இரண்டு சிறப்பு அறிக்கையாளர்கள் ஏப்ரல் மாதம் சிறிலங்காவுக்குப் பயணம்

ஐ.நாவின் இரண்டு சிறப்பு அறிக்கையாளர்கள் வரும் ஏப்ரல் மாதம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளனர்.

நாமல், பசிலுடன் நானும் விரைவில் கைது – என்கிறார் மகிந்த

தனது மற்றொரு மகன் நாமல், சகோதரர் பசில் ஆகியோருடன் தானும் விரைவில் கைது செய்யப்படவுள்ளதாகத் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.

இராணுவப் புரட்சி குறித்த அச்சத்தில் மைத்திரி, ரணில் – உபுல் ஜோசப் பெர்னான்டோ

பலவீனமுற்றிருந்த இராணுவத்தைப் பலப்படுத்துவதற்கான காலஅவகாசத்தைப் பெற்றுக் கொள்வதற்காகவே ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் யுத்த நிறுத்த உடன்படிக்கை ஒன்றை மேற்கொள்வதற்கு நோர்வேயின் உதவியைப் பெற்றுக் கொண்டது.

வெளிவிவகார அமைச்சு மறுசீரமைப்புக்கு இந்திய நிபுணர்களின் உதவியைப் பெறத் தடை

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சை மீளமைப்புச் செய்வது தொடர்பாக இந்திய நிபுணர்களின் உதவியைப் பெறும் முயற்சிக்கு, சிறிலங்கா அமைச்சரவையின் பொருளாதார முகாமைத்துவக் குழு அனுமதி மறுத்துள்ளது.

லசந்த படுகொலை திட்டம் குறித்து கூட்டு நடவடிக்கை பணியகத்துக்கு முன்னரே தெரியும்

சண்டேலீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க கொலை செய்யப்படுவதற்கு ஒரு மணிநேரம் முன்னதாக, அந்தக் கொலைத் திட்டம் பற்றிய இரகசியத் தகவல் கூட்டு நடவடிக்கைப் பணியகத்துக்கு அறிவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தாஜுதீன் கொலையுடன் தொடர்புடைய முக்கிய பாதுகாப்பு அதிகாரிகள் விரைவில் கைது

ரகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீன் கொலையுடன் தொடர்புடைய, சிறிலங்கா காவல்துறையின் உயர் அதிகாரிகள், அதிபர் பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகள் உள்ளிட்டோர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படவுள்ளனர்.

சிறிலங்கா அதிபரின் ஜேர்மனி பயண ஏற்பாடுகளில் குழறுபடி – கருணாதிலக அமுனுகமவுக்கு கண்டனம்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, ஜேர்மனிக்கு மேற்கொண்ட மூன்று நாள் பயணத்துக்கான ஏற்பாடுகளில் விடப்பட்ட தவறுகளுக்காக ஜேர்மனிக்கான சிறிலங்கா தூதுவர் கருணாதிலக அமுனுகம, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சினால் கண்டிக்கப்பட்டுள்ளார்.