மேலும்

சிறிலங்கா அதிபரின் ஜேர்மனி பயண ஏற்பாடுகளில் குழறுபடி – கருணாதிலக அமுனுகமவுக்கு கண்டனம்

maithri-berlin (1)சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, ஜேர்மனிக்கு மேற்கொண்ட மூன்று நாள் பயணத்துக்கான ஏற்பாடுகளில் விடப்பட்ட தவறுகளுக்காக ஜேர்மனிக்கான சிறிலங்கா தூதுவர் கருணாதிலக அமுனுகம, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சினால் கண்டிக்கப்பட்டுள்ளார்.

கடந்தவாரம் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஜேர்மனி சென்றிருந்த போது, திருப்திப்படும் வகையில் பயண ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.

இதுபற்றிய தகவல்கள் வெளிவந்துள்ள நிலையிலேயே, ஜேர்மனிக்கான சிறிலங்கா தூதுவர் கருணாதிலக அமுனுகம கண்டிக்கப்பட்டுள்ளார்.

இந்தப் பயணத்தின் போது, சிறிலங்கா அதிபருடன் சென்றிருந்த அதிகாரபூர்வ படப்பிடிப்பாளர், அணிவகுப்பு மரியாதையின் போது, ஜேர்மனி அதிபர் மற்றும் சிறிலங்கா அதிபரை முந்திக் கொண்டு செல்ல முற்பட்ட போது, ஜேர்மனி அதிபர் ஏற்சலா மார்க்கெல் அவரை விலகுமாறு அறிவுறுத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *