மேலும்

சரத் பொன்சேகாவுக்கு அமைப்பாளர் பதவி – ஐதேகவுக்குள் வலுக்கும் எதிர்ப்பு

sarath-fonsekaதேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு தொகுதி அமைப்பாளர் பதவி வழங்கப்படுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சிக்குள் எதிர்ப்பு எழுந்துள்ளது.

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தமக்கு கோட்டே தொகுதியின் பிரதம அமைப்பாளர் பதவி தரப்பட வேண்டும் என்று கோரியிருந்தார்.

ஆனால், அதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.

அம்பலாங்கொட தொகுதி அமைப்பாளர் பதவியை ஏற்கும் படி, சரத் பொன்சேகாவிடம், ஐதேக கேட்டுக் கொண்டுள்ளது.

எனினும், சரத் பொன்சேகாவுக்கு, ஐதேகவின் எந்தவொரு அமைப்பாளர் பதவியும் வழங்கப்படக் கூடாது என்று கட்சிக்குள் எதிர்ப்பு எழுந்துள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *