போரின் இறுதியில் ஆட்டிலறிகளைப் பயன்படுத்தியது உண்மை – ஒப்புக்கொண்டார் சரத் பொன்சேகா
போரின் இறுதிக்கட்டத்தில் இழப்புக்களைத் தவிர்ப்பதற்கு, சிறிலங்காப் படையினர் ஆட்டிலறிகளையும் மோட்டார்களையும் பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதாக உறுதிப்படுத்தியுள்ளார் சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா.