மேலும்

அனைத்துலக நீதிமன்ற விசாரணையையே கோருகிறது கூட்டமைப்பு – மாவை சேனாதிராசா விளக்கம்

mavai-senathirajahஇன்னொரு அனைத்துலக விசாரணை தேவையில்லை, போர்க்குற்றங்கள் தொடர்பான அனைத்துலக நீதிமன்ற விசாரணையே தேவை என்பதே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், 2014 மார்ச் மாதம் கொண்டு வரப்பட்ட தீர்மானத்துக்கு அமைய, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தினால் சிறிலங்கா தொடர்பான விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இது ஒரு அனைத்துலக விசாரணை. இந்த நிலையில் இன்னொரு அனைத்துலக விசாரணை தேவையில்லை.

ஐ.நா விசாரணை அறிக்கை இந்தமாதம் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மதிப்புக்குரியவர்களைக் கொண்டு, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் தனது மேற்பார்வையில் இந்த விசாரணையை நடத்தியது.

இப்போது தேவைப்படுவது, இந்த விசாரணையின் தொடர்ச்சியான நீதித்துறை நடவடிக்கைகள் தான்.

வெளிநாட்டு நீதிபதிகளின் தலையீட்டுடன் கூடிய, ஒரு அனைத்துலக நீதிமன்ற விசாரணையே இடம்பெற வேண்டும்.

ஐ.நா விசாரணை அறிக்கையில், அனைத்துலக நீதித்துறை செயல்முறைக்கு பரிந்துரைக்கப்படும் என்று நம்புகிறோம்.

ரோம் உடன்பாட்டில் கையெழுத்திடவில்லை என்பதால், அனைத்துலக நீதிமன்ற விசாரணையை நடத்த முடியாது என்று சிறிலங்கா பிரதமர் கூறியுள்ளதற்கு, ஐ.நா விசாரணை அறிக்கை வெளியான பின்னர், பதிலளிப்போம்.

சிறிலங்காவின் நீதி முறைமையின் கீழ் தமிழ்மக்களுக்கு நீதி கிடைக்கும்  என்று நம்பவில்லை.

அனைத்துலக விசாரணைக்கு அழுத்தம் கொடுக்க முடியும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *