மேலும்

சிறிலங்காவின் புதிய அமைச்சரவை பதவியேற்பு

ranil-sworns (2)சிறிலங்காவின் புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வு தற்போது சிறிலங்கா அதிபர் செயலகத்தில் இடம்பெற்று வருகிறது.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று நண்பகல் 12 மணியளவில் இந்த நிகழ்வு ஆரம்பமாகியது.

அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்பாக, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் தற்போது பதவியேற்று வருகின்றனர்.

38 அமைச்சர்கள் பதவியேற்ற நிலையயில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உரையாற்றினார். அதையடுத்து மீண்டும் அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்வு தொடர்கிறது.

new-ministers (1)new-ministers (2)new-ministers (3)new-ministers (4)

new-cabinet

அதையடுத்து 39ஆவதாக பதவியேற்க ரவூப் ஹக்கீம் அழைக்கப்பட்ட போதும் அவர் சமூகமளித்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய அமைச்சர்கள்

  1. ரணில் விக்ரமசிங்க  – தேசிய கொள்கை மற்றும்  பொருளாதாரா விவகார அமைச்சர்
  2. ஜோன் அமரதுங்க  – சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர்
  3. காமினி ஜயவிக்கிரம பெரேரா  – வலுவாதார அபிவிருத்தி, வன ஜீவராசிகள் அமைச்சர்
  4. நிமால் சிறிபால டி சில்வா  – போக்குவரத்து அமைச்சர்
  5. எஸ்.பி.திசநாயக்க  – சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர்
  6. ஜோன் செனிவிரத்ன  – தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர்
  7. லக்ஸ்மன் கிரியல்ல – பல்கலைக்கழக கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள்  அமைச்சர்
  8. அநுர பிரியதர்சன யாப்பா  – அனர்த்த முகாமைத்துவ அமைச்சர்
  9. சுசில் பிரேமஜயந்த  – தொழில்நுட்ப கல்வி மற்றும் தொழில்வாய்ப்பு அமைச்சர்
  10. திலக் மாரப்பன  – சட்டமும்  ஒழுங்கும் மற்றும் சிறைச்சாலைகள் புனரமைப்பு அமைச்சர்
  11. ராஜித சேனாரத்ன  –  சுகாதாரம் போசனை மற்றும் சுதேச மருத்துவத்துறை அமைச்சர்
  12. ரவி கருணாநாயக்க  – நிதி அமைச்சர்
  13.  மகிந்த சமரசிங்க  – திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சர்
  14. வஜிர அபயவர்த்தன  – உள்நாட்டு விவகார அமைச்சர்
  15. எஸ்.பி.நாவின்ன  – உள்ளக விவகார, வடமேல் மாகாண அபிவிருத்தி மற்றும் கலாசார அமைச்சர்
  16. சம்பிக்க ரணவக்க  – மாநகர, மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர்
  17. மகிந்த அமரவீர  – மீன்பிடி மற்றும் நீரக வளங்கள் அமைச்சர்
  18. நவீன் திசநாயக்க  – பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர்
  19. ரஞ்சித் சியம்பலாபிட்டிய  – மின்வலு மற்றும் புதுப்பிக்கப்பட்ட மின்சக்தி அமைச்சர்
  20. துமிந்த திசநாயக்க –  விவசாய அமைச்சர்
  21. விஜேதாஸ ராஜபக்ச-  புத்தசாசன  அமைச்சர்
  22.  பீ.ஹரிசன்  – கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர்
  23. ரஞ்சித் மத்தும பண்டார   – அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர்
  24. கயந்த கருணாதிலக்க – நாடாளுமன்ற புனரமைப்பு  மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர்
  25. சஜித் பிரேமதாச  – வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர்
  26. அர்ஜுன ரணதுங்க  – துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர்
  27. எம்.கே.ஏ.டி.எஸ்.குணவர்தன  – காணி அமைச்சர்
  28. பி.திகாம்பரம் – மலையக புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர்
  29. சந்திராணி பண்டார  – மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி அமைச்சர்
  30. தலதா அத்துகோரள – வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்
  31. அகில விராஜ் காரியவசம்  – கல்வி அமைச்சர்
  32.  டி.எம்.சுவாமிநாதன் – புனர்வாழ்வு, மீள்குடியேற்ற, இந்து சமய விவகார அமைச்சர்
  33. சந்திம வீரக்கொடி – பெற்றோலிய மற்றும் பெற்றோலிய வாயு அமைச்சர்
  34. தயாசிறி ஜயசேகர  – விளையாட்டு அமைச்சர்
  35. சாகல  ரத்னாயக்க  – தெற்கு அபிவிருத்தி அமைச்சர்
  36. ஹரீன் பெர்னான்டோ – தொலைத் தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சர்
  37.  மனோ கணேசன்  – தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சர்
  38. தயா கமகே  – ஆரம்பக் கைத்தொழில் அமைச்சர்
  39. ரிசாத் பதியுதீன் – கைத்தொழில் வர்த்தக அமைச்சர்
  40. கபீர் மொஹமட் ஹசீர் மொஹமட் – அரச தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர்
  41. ரவூப் ஹக்கீம் – நகர திட்டமிடல் , நீர்வழங்கல் அமைச்சர்
  42.  அப்துல் ஹலீம் முகமட் காசிம் – அஞ்சல் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர்

40 அமைச்சர்கள் பதவியேற்ற நிலையில் சிறிலங்கா அதிபரின்உரை இடம்பெற்றது. அதையடுத்து மீண்டும் அமைச்சர் கள் பதவியேற்பு தொடர்ந்தது. 42 அமைச்சர்கள் பதவியேற்ற நிலையில், இந்த நிகழ்வு நிறைவடைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *