மேலும்

மாதம்: June 2015

துறைமுக நகரத் திட்டத்துக்காக இந்தியாவிடம் கையேந்தும் சீனா

தற்போது கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தைத் தொடர்வதற்கு சிறிலங்கா அரசாங்கத்தின் அனுமதியைப் பெற்றுத் தருமாறு சீனா, இந்தியாவிடம் கையேந்தி நிற்கிறது. இது நடைமுறை உண்மையாகும்.

கனிமொழியுடன் பேசிய பின்னரே எழிலன் சரணடைந்தார் – நீதிமன்றத்தில் அனந்தி சாட்சியம்

இறுதிக்கட்டப் போரின் போது இடம்பெற்ற விடுதலைப்புலிகளின் சரணடைவு, அனைத்துலகத்தின்,  குறிப்பாக இந்தியாவின் ஏற்பாட்டில் இடம்பெற்றதாக வடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணப் பயணத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க விரும்பாத மோடி – இந்திய நாளிதழ்

கடந்த மார்ச் மாதம் சிறிலங்காவுக்கு மேற்கொண்ட பயணத்தின் போது,  யாழ்ப்பாணத்தில், பாதிக்கப்பட்ட தமிழர்களுடன் கலந்துரையாடல் நடத்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மறுத்து விட்டதாக இந்திய நாளிதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

உலகில் மிகவேகமாக வளரும் நகரங்களின் பட்டியல் – முதலிடத்தில் கொழும்பு

உலகில் மிகவேகமாக வளர்ந்து வரும் நகரங்களின் பட்டியலில் சிறிலங்கா தலைநகர் கொழும்பு முதலாவது இடத்தில் உள்ளதாக, மாஸ்டர் கார்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

எதிர்க்கட்சியின் இனவாத நிகழ்ச்சி நிரல்- பட்டியல் போட்டு பதிலடி கொடுத்த ரணில்

சிறிலங்கா மத்திய வங்கியின் ஆளுநராக அர்ஜூன மகேந்திரன் நியமிக்கப்பட்டதை எதிர்க்கும் பின்னணியில், இனவாத நிகழ்ச்சி நிரல் உள்ளது என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தெரிவித்துள்ளார்.

பௌத்தத்தின் இருண்ட பக்கம் – பிபிசியின் ஆய்வு

தமிழ்ப் புலிகளுக்கு எதிரான நீண்ட யுத்தமானது கடும்போக்கு பௌத்தவாதிகள் மேலும் தமது மதவாதக் கருத்துக்களைப் பரப்பச் செய்ய வழிவகுத்தது. சிங்களவர்களையும் பௌத்தத்தையும் பாதுகாப்பதற்கான ஒரு யுத்தமாகவே புலிகளுடனான யுத்தம் சித்தரிக்கப்பட்டது.

மைத்திரியின் பாதுகாப்புக்குப் பொறுப்பான அதிகாரி பதவிஇறக்கம்

சிறிலங்கா அதிபர் பாதுகாப்புப் பிரிவின் புதிய பொறுப்பதிகாரியாக சிறிலங்கா காவல்துறையின் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் முனசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். சிறிலங்கா காவல்துறை மா அதிபர் கடந்த ஜூன் முதலாம் நாள் தொடக்கம் இந்த நியமனத்தை வழங்கியுள்ளார்.

தமிழ் இளைஞர்கள் கடத்தலுடன் கடற்படையினருக்குத் தொடர்பு – நீதிமன்றத்தில் சிஐடி அறிக்கை

கொழும்பில் 2008ம் ஆண்டு, ஐந்து தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல்போன சம்பவத்துடன் சிறிலங்கா கடற்படை அதிகாரிகள் சிலர் தொடர்புபட்டுள்ளதாக, கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

மலையகத் தமிழர் நலனுக்காக உதயமானது தமிழ் முற்போக்கு கூட்டணி

மலையகத் தமிழர்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் மூன்று தமிழ்க்கட்சிகள் இணைந்து- தமிழ் முற்போக்கு கூட்டணி என்ற பெயரில், புதிய அரசியல் கூட்டணி ஒன்றை அமைத்துள்ளன. கொழும்பு மற்றும் மலையகத்தில் வாழும் தமிழ்மக்களின் நலனுக்காக இந்தப் புதிய கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது.

பதவி விலகினார் திருகோணமலை ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை

கத்தோலிக்கத் திருச்சபையின் திருகோணமலை மறைமாவட்ட ஆயர் வண. ஜோசப் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை தனது பதவியை விட்டு விலகியுள்ளார். அவரது பதவி விலகலை பாப்பரசர் பிரான்சிஸ், ஏற்றுக்கொண்டுள்ளதாக, வத்திக்கான் வானொலி தகவல் வெளியிட்டுள்ளது.