மேலும்

தமிழ் இளைஞர்கள் கடத்தலுடன் கடற்படையினருக்குத் தொடர்பு – நீதிமன்றத்தில் சிஐடி அறிக்கை

srilanka navyகொழும்பில் 2008ம் ஆண்டு, ஐந்து தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல்போன சம்பவத்துடன் சிறிலங்கா கடற்படை அதிகாரிகள் சிலர் தொடர்புபட்டுள்ளதாக, கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

கடத்தப்பட்டு காணாமல்போன இளைஞர்கள் தொடர்பான வழக்கின் விசாரணை நேற்று நடந்தபோது சாட்சியமளித்த குற்றப்புலனாய்வுத் திணைக்கள பொறுப்பதிகாரி ரஞ்சித் முனசிங்க, சம்பந்தப்பட்ட இளைஞர்களின் கடத்தல்களுடன் சுமித் ரணசிங்க மற்றும் சந்தன குமார ஆகிய கற்படை அதிகாரிகள் சம்பந்தப்பட்டிருப்பதாக தான் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்ததாகக் கூறினார்.

இதுதொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதால் அவர்களைக் கைது செய்யவில்லை என்று கூறிய ரஞ்சித் முனசிங்க,  அவர்களின் வெளிநாட்டு பயணங்களைத் தடைசெய்யும் உத்தரவொன்றை நீதிமன்றத்திடமிருந்து பெற்றுக்கொண்டதாகவும் தெரிவித்தார்.

இவர்கள் இருவர் தவிர சம்பத் முனசிங்க எனும் மேலும் ஒரு கடற்படை அதிகாரியும் இந்த கடத்தல்களில் சம்பந்தப்பட்டுள்ளதை தான் மேற்கொண்ட விசாரணைகளின்போது உறுதிப்படுத்தப்பட்டதாகவும் குற்றப்புலனாய்வுத் திணைக்கள பொறுப்பதிகாரி ரஞ்சித் முனசிங்க கூறினார்.

மேலும் மூன்றாவது சந்தேகநபருக்கு கடந்த காலத்தில் கொட்டாஞ்சேனை பகுதியில் நிகழ்ந்த கடத்தல் சம்பவங்களுடனும் தொடர்பிருப்பதாக தமது விசாரணைகளில் தெரியவந்திருப்பதாகவும் ரஞ்சித் முனசிங்க நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த வழக்கின் மேலதிக விசாரணை எதிர்வரும் 23ஆம் நாள் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *