மேலும்

நாடாளுமன்றம் கலைக்கப்படுவதை வடக்கு, கிழக்கு மக்கள் விரும்பவில்லை – தேசிய அரசுக்கே ஆதரவு

parliamentநாடாளுமன்றத்தை உடனடியாக கலைத்து தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று சிறிலங்காவில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் பெரும்பாலானோர் கருத்துத் தெரிவித்துள்ள அதேவேளை, வடக்கிலும் கிழக்கிலும் அதற்கு போதிய ஆதரவு அளிக்கப்படவில்லை.

ட்ரான்ஸ்பரன்சி இன்ரநசனல் அமைப்பினால் இந்தக் கருத்துக்கணிப்பு, எல்லா மாவட்டங்களிலும் மேற்கொள்ளப்பட்டது.

18 வயதுக்கு மேற்பட்ட எல்லாத் தரப்பு மக்களிடமும் இருந்து சேகரிக்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில், 49 வீதமான மக்கள் உடனடியாக நாடாளுமன்றத்தைக் கலைத்து தேர்தல் நடத்த வேண்டும் என்று கூறியுள்ளனர்.

26 வீதமான மக்கள் எல்லா கட்சிகளும் இணைந்த தேசிய அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என்றும், 25 வீதமான மக்கள், நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கு முன்னர் 20ஆவது திருத்தச்சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

நாடாளுமன்றத்தை உடனடியாக கலைக்க வேண்டும் என்பதற்கு சப்ரகமுவ மாகாணத்தில் ஆக கூடிய ஆதரவு காணப்படுகிறது. அங்கு 82 வீதமானோர் நாடாளுமன்றம் உடனடியாக கலைக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளனர்.

தென்மாகாணத்தில் 69 வீதமானோரும்,  வடமத்திய மற்றும் மத்திய மாகாணங்களில் 56 வீதமானோரும்,  மேல் மாகாணத்தில் 54 வீதமானோரும், வடமேல் மாகாணத்தில் 53 வீதமானோரும், ஊவா மாகாணத்தில் 34 வீதமானோரும் உடனடியாக நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

வடக்கு மாகாணத்தில் ஆகக் குறைந்தளவாக 24 வீதமானோர் மட்டுமே நாடாளுமன்றக் கலைப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

கிழக்கு மாகாணத்தில், 38 வீதமானோர் உடனடியாக நாடாளுமன்றம் கலைக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளனர்.

அதேவேளை அனைத்துக் கட்சிகளையும் உள்ளடங்கிய தேசிய அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என்று வடக்கு மாகாணத்திலேயே அதிகளவானோர் விருப்பம் வெளியிட்டுள்ளனர். இங்கு 46 வீதமானோர் தேசிய அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

அதேவேளை, கிழக்கு, ஊவா, மத்திய மாகாணங்களில் தேசிய அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என்று 31 வீதமானோர் கருத்து வெளியிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *