மேலும்

யாழ்.சிறையில் தமிழ்நாட்டு மீனவர்கள் உண்ணாவிரதம் – இந்தியத் தூதரகத்தின் கோரிக்கை நிராகரிப்பு

jaffna-prisionயாழ்ப்பாணச் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டு மீனவர்கள் 38 பேர் இன்று இரண்டாவது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இராமேஸ்வரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மற்றும் காரைக்காலைச் சேர்ந்த 34 மீனவர்கள் கடந்த செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதங்களில் கச்சதீவு மற்றும் நெடுந்தீவு கடற்பரப்புகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது சிறிலங்கா கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டனர்.

இவர்கள், ஊர்காற்றுறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, இதுவரை ஐந்து தடவைகள் காவல் நீடிக்கப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

சிறிலங்கா கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட 85 விசைப்படகுகளுடன் தங்களை விடுவிக்க வலியுறுத்தி நேற்று காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கிய 38 மீனவர்களும் இன்று இரண்டாவது நாளாக உண்ணாவிரதத்தை தொடர்ந்தனர்.

யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரி மூர்த்தி சிறையில் உள்ள மீனவர்களை சந்தித்து பேச்சு நடத்தினார்.

ஆனால் கடந்த ஒக்டோபர் 27, 28 ஆகிய இரண்டு தினங்களில் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி மீனவர்கள் உண்ணாவிரதம் இருந்தபோது விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத்தூதரகம் அளித்த வாக்குறுதியை ஏற்று உண்ணாவிரதத்தை கைவிட்டிருந்தனர்.

ஆனால், இம்முறை மீனவர்கள் தங்களை விடுதலை செய்யும் வரை உண்ணாவிரதத்தை தொடரப் போவதாக அறிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *