மேலும்

நேபாளம் சென்றடைந்தார் சிறிலங்கா அதிபர்

mahinda-nepal (1)சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச சார்க் நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இன்று காலை நேபாளத்தைச் சென்றடைந்தார்.

நேபாளத்தின் திரிபுவன் விமான நிலையத்தைச் சென்றடைந்த சிறிலங்கா அதிபருக்கு, அங்கு நேபாள அரசாங்கத்தினால் செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

mahinda-nepal (2)

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுடன், வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், வெளிவிவகாரச்செயலர் செனுகா செனிவிரத்ன, வெளிவிவகார அமைச்சைக் கண்காணிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தன ஆகியோரும் நேபாளம் சென்றுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *