மேலும்

மகிந்தவை அனைத்துலக நீதிமன்றத்துக்கு இழுத்துச் செல்ல விடமாட்டோம் – ஐதேக சூளுரை

Harsha-de-Silvaஎந்தவொரு சிறிலங்கா தலைவரையும் போர்க்குற்றச்சாட்டுகளுக்கான அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு அனுமதிக்கமாட்டோம் என்று எதிர்க்கட்சியான ஐதேக அறிவித்துள்ளது.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர், ஹர்ச டி சில்வா,

“தீவிரவாதத்தில் இருந்து நாட்டை விடுவித்த பாதுகாப்புப் படைகளை பாதுகாப்பது ஐதேகவின் முழுமையான பொறுப்பாகும்.

நான் உலகத்துக்கு ஒன்றைக் கூறுகிறேன். போர்க்குற்றங்களுக்கான சிறிலங்கா அதிபரையோ அல்லது வேறு எந்த தலைவரையோ அனைத்துலக நீதிமன்றத்துக்கு இழுத்துச் செல்ல நாம் அனுமதிக்கமாட்டோம்.

தேர்தலில் அவர் வெற்றி பெற்றாலும் சரி, தோல்வியுற்றாலும் சரி, சிறிலங்கா அதிபரை போர்க்குற்ற நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு அனுமதியோம்.

அல்ஜசீரா தொலைக்காட்சி விவாதம் தொடர்பாக அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே நியாயமற்ற, பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறியுள்ளார்.

அந்த நேர்காணலில் அமைச்சர் ரம்புக்வெலவும் பொருளாதார விவகாரங்கள் குறித்துப் பேச ஒப்புக்கொண்டிருந்தார்.

உலகத் தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திராவையும் அல்ஜசீரா அழைத்துள்ளது என்று எமக்குத் தெரியாது.

உலகத் தமிழர் பேரவையின் பேச்சாளரின் குற்றச்சாட்டுகளை நான் ஏற்றுக் கொள்ளவில்லை.

நம்பகமான உள்நாட்டு விசாரணையை வலியுறுத்தியிருந்தேன்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *