சீன நீர்மூழ்கி விவகாரம்: மகிந்தவின் உள்நோக்கம் குறித்து இந்தியா பெரும் கவலை
சீன நீர்மூழ்கி மீண்டும் கொழும்பு வந்துள்ளது, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் உள்நோக்கம் குறித்து இந்திய அரசாங்கத்துக்கு மிகப்பெரிய கவலையை ஏற்படுத்தியுள்ளதாக, ரைம்ஸ் ஒவ் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
வியட்னாம் பிரதமர் நுகுயென் தன் டங் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்ட சில நாட்கள் கழித்து, சீன நீர்மூழ்கியான சங்செங்-2 கொழும்புத் துறைமுகத்துக்கு மீண்டும் வந்துள்ளது.
இது, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் உள்நோக்கம் குறித்து, இந்திய அரசாங்கத்துக்கு மிகப்பெரிய கவலையை ஏற்படுத்தியுள்ளது.
எந்தவொரு சீன நீர்மூழ்கியும் சிறிலங்காவுக்கு வருவதை இந்தியா ஏற்றுக் கொள்ளாது என்று இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கு எச்சரிக்கை விடுத்திருந்த போதிலும், மற்றொரு சீன நீர்மூழ்கியை கொழும்பில் தரிப்பதற்கு சிறிலங்கா அனுமதி அளித்துள்ளது.
இது இந்திய நலன்களுக்கு விரோதமானது. இந்தியாவின் எச்சரிக்கையை சிறிலங்கா மீறியுள்ளது.
எனினும், இந்திய அரசுக்கு வேறு வழியில்லை என்றும் ரைம்ஸ் ஒவ் இந்தியா குறிப்பிட்டுள்ளது.