நியூயோர்க் சென்றடைந்தார் சிறிலங்கா அதிபர்
ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று அமெரிக்காவைச் சென்றடைந்தார்.
நேற்றுக்காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, இன்று காலை நியூயோர்க்கின் ஜோன் எவ் கெனடி விமான நிலையத்தை சென்றடைந்தார்.
சிறிலங்கா அதிபருக்கு அங்குள்ள சிறிலங்கா தூதுவர் ரொகான் பெரேரா மற்றும் அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர்.
விமான நிலையத்தில் இருந்து வாகன பவனியாக, லூவ்ஸ் ரிகென்சி விடுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கு, சிறிலங்கா வெளிவிவகாரச் செயலர் பிரசாத் காரியவசம், சிறிலங்கா அதிபரை வரவேற்றார்.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாளை பிற்பகல் 5 மணிக்கு, ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் உரையாற்றுவார்.