மேலும்

ருவான் விஜேவர்த்தனவுடன் பிரெஞ்சு கூட்டுப்படைத் தளபதி சந்திப்பு

Rear Admiral Didier Piaton -ruwanஇந்தியப் பெருங்கடலில் நிலைகொண்டுள்ள பிரெஞ்சுப் படைகளின் கூட்டுத் தளபதி றியர் அட்மிரல் டிடியர் பியாட்டன் (Rear Admiral Didier Piaton) சிறிலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் நேற்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

பரஸ்பர ஈடுபாடுள்ள, இருதரப்பு நலன்கள் சார்ந்த விவகாரங்கள் குறித்து இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

சிறிலங்காவுக்கான பிரெஞ்சுத் தூதுவர் ஜீன் மார்ட்டின் சூவும் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டார்.

Rear Admiral Didier Piaton -ruwan

கொழும்பில் நடந்த காலி கலந்துரையாடல் என்ற பாதுகாப்புக் கருத்தரங்கில் பங்கேற்க, பிரெஞ்சுப் படைகளின் கூட்டுத் தளபதி றியர் அட்மிரல் டிடியர் பியாட்டன் சிறிலங்கா வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *