மேலும்

முற்றாக முடங்கியது வடக்கு மாகாணம்

jaffna-protest (1)பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி இன்று நடத்தப்பட்ட முழு அடைப்புப் போராட்டத்தினால் வடக்கு மாகாணம் முற்றாக செயலிழந்தது.

வடக்கு மாகாணம் முழுவதிலும், போக்குவரத்து, வணிக மற்றும் அரச, தனியார் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களின் செயற்பாடுகள் இன்று முழு அளவில் செயலிழந்திருந்தன. அத்தியாவசிய சேவைகள் மாத்திரம் இயங்கின.

அதேவேளை, அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி, வட மாகாண ஆளுனர் செயலகத்துக்கு முன்பாக இன்று காலை போராட்டம் ஒன்று நடத்தப்பட்டது.

jaffna-protest (1)jaffna-protest (2)jaffna-protest (4)jaffna-protest (5)jaffna-protest (6)jaffna-protest (7)jaffna-protest (8)jaffna-protest (9)jaffna-protest (10)

இதனை முன்னிட்டு அந்தப் பகுதியில் பெருமளவு காவல்துறையினரும், சிறப்பு அதிரடிப்படையினரும் குவிக்கப்பட்டிருந்தனர்.

வடக்கில் இன்று முழு அடைப்புப் போராட்டம் இடம்பெற்ற போது, சிறப்பு அதிரடிப்படையினரின்  நடமாட்டம் அதிகரித்துக் காணப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *