மேலும்

எதிர்ப்பை மீறி யாழ். வந்தார் மைத்திரி – முடிவை மீறி வடக்கு அமைச்சரும் நிகழ்வில் பங்கேற்பு

maithriஅரசியல் கைதிகளின் விடுதலைக்கு நடவடிக்கை எடுக்காத சிறிலங்கா அதிபருக்கு எதிராக இன்று யாழ்ப்பாணத்தில் எதிர்ப்புப் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று காலை யாழ்ப்பாணம் வந்துள்ளார்.

அச்சுவேலி – நிலாவரையில் விவசாய உற்பத்திகளை அதிகரிப்பது தொடர்பான நிகழ்வில் அவர் இன்று காலை பங்கேற்றுள்ளார்.

அதையடுத்து. யாழ். இந்துக்கல்லூரியில் நடைபெறவுள்ள தமிழ்மொழித் தின விழாவிலும் சிறிலங்கா அதிபர் பங்கேற்கவுள்ளார்.

யாழ்ப்பாணம் வரும் சிறிலங்கா அதிபருக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் நடத்த பொது அமைப்புகள் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளன.

இந்த நிலையில், சிறிலங்கா அதிபர் இன்று நிகழ்வுகளில் பங்கேற்கும் யாழ்ப்பாணம், மற்றும் கிளிநொச்சியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

ms-jaffna

சிறிலங்கா அதிபர் பங்கேற்கும் நிகழ்வுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்காமல் புறக்கணிப்பர் என்று கூட்டமைப்பின் பேச்சாளரான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்திருந்தார்.

வடக்கு மாகாணசபையும் சிறிலங்கா அதிபரின் நிகழ்வுகளை புறக்கணிக்கும் என்று அலைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்திருந்தார்.

எனினும், நிலாவரையில் இன்று காலை நடக்கும் நிகழ்வில் வடக்கு மாகாண விவசாய அமைச்சர் சிவனேசன் , சிறிலங்கா அதிபருடன் இணைந்து பங்கேற்றுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *