மேலும்

Tag Archives: மைத்திரிபால சிறிசேன

சிறிலங்கா அதிபரைச் சந்தித்தார் சமந்தா பவர்

மூன்று நாள் பயணமாக சிறிலங்கா வந்துள்ள ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர் இன்று காலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

இன்று பிற்பகல் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படுகிறது 2016ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம்

சிறிலங்காவின் புதிய அரசாங்கத்தின் முதலாவது வரவுசெலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து இன்று முடிவு? – பிரதமர் செயலகத்தில் முக்கிய கூட்டம்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக இன்று தமது முடிவை அறிவிப்பதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வாக்குறுதி அளித்திருந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ஆராய சிறிலங்கா பிரதமர் தலைமையில் இன்று முக்கிய கூட்டம் இடம்பெறவுள்ளது.

கொழும்பு வந்தது சோபித தேரரின் உடல் – வரும் 12ஆம் நாள் தேசிய துக்க நாளான பிரகடனம்

சிங்கப்பூர் மருத்துவமனையில் நேற்று அதிகாலையில் காலமான, சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தின் தேசிய அழைப்பாளர் வண.மாதுளுவாவே சோபித தேரரின் உடல் நேற்றிரவு கொழும்புக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

அரசியல் கைதிகள் விவகாரம் – மைத்திரி, ரணில், சந்திரிகாவைச் சந்திக்கப் போகிறதாம் கூட்டமைப்பு

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர்  ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க ஆகியோருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தவாரம் பேச்சு நடத்தவுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர்  மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

ஜெனிவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்த அழுத்தம் கொடுப்போம் – இரா. சம்பந்தன்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சிறிலங்கா அரசாங்கம் நடைமுறைப்படுத்த ஒத்துழைப்பையும், அழுத்தங்களையும் கொடுப்போம் என்று எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

சேற்றில் சிக்கினார் சிறிலங்கா அதிபர் மைத்திரி

சிறிலங்காவின் பல பகுதிகளிலும் பெய்து வரும் கடும் மழையால், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும் சேற்றில் சிக்கிக் கொள்ள நேரிட்டது.

ஐ.நா- சிறிலங்கா இடையிலான உறவுகள் வலுப்பெற்றுள்ளதாம் – மைத்திரிபால சிறிசேன கூறுகிறார்

ஐ.நாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான உறவுகள் வலுப்படுத்தப்பட்டுள்ளதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி, முல்லைத்தீவில் சிறிலங்கா படையினர் வசம் இருந்த 576 ஏக்கர் காணிகள் ஒப்படைப்பு

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் சிறிலங்கா படையினரின் கட்டுப்பாட்டில் இருந்து வந்த 576 ஏக்கர் தனியார் காணிகள் நேற்று உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மைத்திரிக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்திய மகிந்தவின் தொலைபேசி அழைப்பு

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்க நியூயோர்க் செல்ல முன்னர், அவருக்கு முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச வாழ்த்துத் தெரிவித்ததாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.