மேலும்

Tag Archives: நரேந்திர மோடி

கீரிமலையில் மோடியுடன் கைகுலுக்கிய பல்கலைக்கழக மாணவன் இந்திய பாதுகாப்பு அதிகாரிகளால் கைது

யாழ்ப்பாணத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கைகுலுக்கிய பல்கலைக்கழக மாணவன் ஒருவர் இந்தியப் பாதுகாப்பு அதிகாரிகளால் பிடிக்கப்பட்டு, சிறிலங்கா காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

13வது திருத்தம் குறித்த மோடியின் கோரிக்கை – சிறிலங்கா அரசியல் மட்டத்தில் குழப்பமான கருத்துகள்

சிறிலங்காவில் பயணம் மேற்கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி,13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறும், அதற்கு அப்பால் அதிகாரங்களைப் பகிர்ந்து தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காணுமாறும்,விடுத்த வேண்டுகோள் குறித்து, அரசியல் வட்டாரங்களில் பல்வேறு விதமான கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அத்துமீறும் எவர் மீதும் சுடும் அதிகாரம் கடற்படைக்கு உள்ளது – மீண்டும் சர்ச்சையைக் கிளப்புகிறார் ரணில்

சிறிலங்காவின் கடற்பரப்புக்குள் அத்துமீறும், இந்திய மீனவர்களைச் சுடும் உரிமை சிறிலங்காவுக்கு உள்ளது என்று, மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டுள்ளார் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

13வது திருத்தத்துக்கு அப்பால் சென்று தீர்வு காணும் திட்டம் இல்லை – சிறிலங்கா அமைச்சர் கூறுகிறார்

அரசியலமைப்பின் 13வது திருத்தச்சட்டத்துக்கு அப்பால் சென்று அரசியல் தீர்வு காணும் எண்ணம், ஏதும், சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கத்துக்குக் கிடையாது என்று நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

நரேந்திர மோடிக்காக மீறப்பட்ட சிறிலங்காவின் இராஜதந்திர மரபுகள்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் சிறிலங்கா பயணத்தின் போது, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், இராஜதந்திர மரபுகளை மீறிச் செயற்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மோடியின் ஆலோசனை சிறிலங்காவுக்குப் புரிந்திருக்கும் – வெங்கய்ய நாயுடு நம்பிக்கை

13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறும், அதற்கு அப்பால் சென்று தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காணுமாறும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வழங்கிய ஆலோசனையை சிறிலங்காவின் புதிய அரசாங்கம் ஏற்றுச் செயற்படும் என்று இந்தியாவின் மத்திய இணைஅமைச்சர் வெங்கய்ய நாயுடு நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அரசியல்தீர்வை இந்தியா உறுதிப்படுத்த வேண்டும் – மோடியிடம் கோரினார் விக்னேஸ்வரன்

இலங்கைத் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு ஒன்றை உறுதிப்படுத்துமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்தியப் பிரதமரிடம் மன்னார் ஆயர் கையளித்த மனு

தலைமன்னார் இறங்குதுறைக்கு நேற்று வந்திருந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம், மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு யோசேப் ஆண்டகையினால், மனு ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.

பலாலியில் மோடிக்காக காத்திருந்த இராட்சதப் பறவை

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்புக் கருதியே, சிறிலங்காவில் அவரது பயணங்களுக்கு இந்திய விமானப்படையின் உலங்குவானுர்திகளும், இராட்சத விமானங்களும் பயன்படுத்தப்பட்டதாக இந்திய அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

உதவியாளர்கள் இன்றி மகிந்தவுடன் தனியாகப் பேசினார் மோடி

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவை நேற்று தனியாகச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.