திருகோணமலை மீது இந்தியாவுக்கு ஆர்வமில்லையாம்
திருகோணமலை மீது இந்தியா ஆர்வம் கொண்டிருக்கவில்லை என்று இந்தியத் தூதரகப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
திருகோணமலை மீது இந்தியா ஆர்வம் கொண்டிருக்கவில்லை என்று இந்தியத் தூதரகப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
அடுத்த நான்கு ஆண்டுகளில் சிறிலங்காவின் வன அடர்த்தியை 32 வீதமாக அதிகரிப்பதே தனது திட்டம் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவுக்கான புதிய இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங் சந்து இன்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், தனது நியமனப் பத்திரங்களை சமர்ப்பித்து, பதவியைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
கொழும்பு நிதி நகரத்தை அமைப்பதற்காக, கடலில் இருந்து 28 வீத நிலப்பரப்பு உருவாக்கப்பட்டு விட்டதாகவும், எஞ்சிய நிலப்பரப்பு இந்த ஆண்டு இறுதிக்குள் உருவாக்கப்பட்டு விடும் என்றும் சீன துறைமுக பொறியியல் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஏறுதழுவுதல் விளையாட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைக்கு எதிராக தமிழ்நாட்டில் வெடித்துள்ள பெரும் போராட்டத்துக்கு, உலகத் தமிழர்களின் பேராதரவு கிடைத்துள்ள நிலையில், இன்று கிளிநொச்சி, மட்டக்களப்பு, திருகோணமலை, கொழும்பு ஆகிய இடங்களில் போராட்டங்கள் இடம்பெற்றன.
நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கில் கொழும்பில் மேல் நீதிமன்றத்தினால் அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது.
கொழும்பில் கப்பம்கோரி தமிழ் இளைஞன் ஒருவரைக் கடத்தி காணாமற்போகச் செய்தவர் என்ற குற்றச்சாட்டில், சிறிலங்கா கடற்படை உயர் அதிகாரி ஒருவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று கைது செய்தனர்.
கொழும்பு நகரம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்தவதற்கு சிறிலங்கா அரசாங்கம் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தவுள்ளது.
தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் யோசனையை சிறிலங்கா அரசாங்கம் கைவிடுமேயானால், அரசியலமைப்பை உருவாக்கும் செயற்பாடுகளில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்காது, அதிலிருந்து வெளியேறும் நிலை ஏற்படும் என்று எச்சரித்துள்ளார் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன்.
சிறிலங்காவில் சீனாவின் தலையீடுகள் அதிகரித்துள்ள நிலையில் இந்தியா எலியைப் போல அமைதியாக இருப்பதாக, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.