மேலும்

Tag Archives: கொழும்பு

கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் – சீனாவுக்கு சிறிலங்கா நிபந்தனை

கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம், சீனாவிடம் சில நிபந்தனைகளை முன்வைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீனாவுடனான நெருங்கிய மத உறவுகளை வெளிப்படுத்த சிறிலங்காவில் புதிய பௌத்த தொலைக்காட்சி

சிறிலங்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான நெருக்கமான மத உறவுகளை வெளிப்படுத்தும் வகையில், புதிய பௌத்த தொலைக்காட்சி மற்றும் வானொலிச் சேவைகள் கொழும்பில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.

சிங்கப்பூரில் சிகிச்சையை முடித்து நாடு திரும்புகிறார் மன்னார் ஆயர்

சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வரும் மன்னார் ஆயர் இராயப்பு யோசெப் ஆண்டகை, நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மன்னார் ஆயர் இல்லத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியப் பிரதமரைச் சந்தித்தார் சிறிலங்கா அதிபர்

பூகோள காலநிலை மாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் சென்றிருந்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பாரிசில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துள்ளார். பூகோள காலநிலை மாநாட்டின் போதே நேற்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

நேற்று பிணை வழங்கப்பட்ட ஒருவர் மட்டுமே விடுவிப்பு – எஞ்சியோர் சிறைக்குள்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த 8 தமிழ் அரசியல் கைதிகள் நேற்று பிணையில் செல்ல கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தினால் அனுமதிக்கப்பட்டனர்.

சிறிலங்கா, தமிழ்நாட்டுக்கு வெள்ள ஆபத்து – வங்கக் கடலில் புதிய காற்றழுத்தம்

தெற்கு வங்கக்கடலில் புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்தம் காரணமாக, சிறிலங்காவிலும் தென்னிந்தியாவிலும் வெள்ள ஆபத்து ஏற்படலாம் என்று காலநிலை தொடர்பான இணையத்தளம் முன்னெச்சரிக்கை விடுத்துள்ளது.

32 அரசியல் கைதிகளுக்கு மீண்டும் விளக்கமறியல் – காற்றில் பறக்கும் சிறிலங்காவின் வாக்குறுதி

இன்று பிணையில் விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த 32 தமிழ் அரசியல் கைதிகளும், சட்டமா அதிபர் திணைக்களத்தின் அறிவுறுத்தல் நீதிமன்றத்துக்கு கிடைக்காததால் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பிள்ளையான் மீதான விசாரணை திசை திருப்பப்படுகிறதா?

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலைக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி மற்றும், வாகனம் என்பன மறைத்து வைக்கப்பட்டுள்ள இடம் தொடர்பாக, பிள்ளையானிடம் விசாரணை செய்து வருவதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

பிள்ளையானை டிசம்பர் 10 வரை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனை, அடுத்த மாதம் 10ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் 2015இல் எச்ஐவி தொற்று அதிகரிப்பு – மருத்துவ அதிகாரி தகவல்

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், யாழ்ப்பாண மாவட்டத்தில் எச்ஐவி தொற்றுக்கு உள்ளானவர்கள் இந்த ஆண்டில் அதிகளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, தேசிய எஸ்ரிடி/எயிட்ஸ்  கட்டுப்பாட்டுத் திட்ட பணிப்பாளர், மருத்துவ கலாநிதி சிசிர லியனகே தெரிவித்துள்ளார்.