சீனாவிடம் பணிந்தது மைத்திரி அரசு – கொழும்பு துறைமுக நகர திட்டத்துக்கு அனுமதி
கொழும்புத் துறைமுக நகர கட்டுமானத் திட்டத்தைத் தொடர்ந்து மேற்கொள்வதற்கு சிறிலங்காவின் புதிய அரசாங்கம், சீனாவின் தொடர்பாடல் கட்டுமான நிறுவனத்துக்கு அனுமதி அளித்துள்ளது.
கொழும்புத் துறைமுக நகர கட்டுமானத் திட்டத்தைத் தொடர்ந்து மேற்கொள்வதற்கு சிறிலங்காவின் புதிய அரசாங்கம், சீனாவின் தொடர்பாடல் கட்டுமான நிறுவனத்துக்கு அனுமதி அளித்துள்ளது.
அரசியல் செல்வாக்கில் வெளிநாடுகளில் உள்ள சிறிலங்கா தூதரகங்களில் இராஜதந்திரிகளாக நியமிக்கப்பட்ட 36 பேரை நாடு திரும்புமாறு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு பணித்துள்ளது.
தற்போதைய அரசியல் நிலைமைகளைக் கருத்தில் கொண்டு, சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தைப் பிற்போடுமாறு, ஐ,நா மனித உரிமைகள் பேரவையிடம், அமெரிக்கா கோரக் கூடும் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சிறிலங்காவின் புதிய அரசாங்கத்துடன் பேச்சுக்களை நடத்துவதற்காக, சிறப்புத் தூதுவர் ஒருவரை சீன அரசாங்கம் விரைவில் கொழும்புக்கு அனுப்பி வைக்கவுள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பு என்ற போர்வையில் சிறிலங்காவின் முப்படைகளுக்கும் காவல்துறையின் அதிகாரங்களைப் பயன்படுத்த அதிகாரமளிக்கும் அசாதாரணமான வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ளார்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரானபோரின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து விசாரிக்க, உள்நாட்டு விசாரணைப் பொறிமுறை ஒன்றை உருவாக்கும் சிறிலங்கா அரசாங்கத்தின் திட்டத்தை கொமன்வெல்த் அமைப்பு வரவேற்றுள்ளது.
சிறிலங்காவின் மூத்த இராணுவ அதிகாரி ஒருவர், சிறிலங்கா ரெலிகொம் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படும், தாமரைக் கோபுரம் (Lotus Tower) கட்டுமானப் பணிக்கான ஆலோசனைக் கட்டணமாக மாதம் ஒரு இலட்சம் ரூபாவை இரகசியமாகப் பெற்று வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்ட அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் தனது நேற்றைய நீண்ட சந்திப்புகளை, இராப்போசன விருந்துடன் நிறைவு செய்ததாக டுவிட்டரில் எழுதியுள்ளார்.
போரின்போது இடம்பெற்ற மீறல்கள் குறித்து உள்நாட்டு விசாரணைகளை நடத்தி, குற்றம் இழைத்தவர்களுக்குத் தண்டனை பெற்றுக் கொடுத்து விட்டு பின்னர் அவர்களுக்கு பொதுமன்னிப்பு அளிக்கலாம் என்று யோசனை கூறியுள்ளார் முன்னாள் வெளிவிவகார பிரதி அமைச்சர் நியோமல் பெரேரா.
மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் அமைச்சரவைப் பேச்சாளராக இருந்த கெஹலிய ரம்புக்வெல, மீண்டும் ஐதேகவில் இணைந்து கொள்ள முயன்ற போதிலும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவரை ஏற்றுக் கொள்ள மறுத்துள்ளார்.