சந்தியா எக்னெலிகொடவுக்கு துணிச்சலான பெண் என்ற விருது வழங்குகிறது அமெரிக்கா
கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொடவுக்கு அமெரிக்கா துணிச்சலான பெண் என்ற அனைத்துலக விருது வழங்கி கௌரவிக்கவுள்ளது.
கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொடவுக்கு அமெரிக்கா துணிச்சலான பெண் என்ற அனைத்துலக விருது வழங்கி கௌரவிக்கவுள்ளது.
மகசின் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளார்.
சிறிலங்கா இராணுவத் தலைமை அதிகாரியாக, யாழ்.படைகளின் தலைமையக கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
வெளிநாட்டு நீதிபதிகளைக் கொண்டு விசாரணைகளை நடத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கம் ஜெனிவாவில் இணங்கவில்லை என்றும், வெளிநாட்டு நீதிபதிகள், வழக்குத்தொடுனர்களின் ஆலோசனையைப் பெறுவதற்கே அரசாங்கம் இணங்கியது என்றும் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில் இரண்டு வாரங்களாகத் தரித்து நின்று கூட்டுப் பயிற்சிகளில் ஈடுபட்டு வந்த அமெரிக்க கடற்படையின் அதிவேகப் போக்குவரத்துக் கப்பலான யுஎஸ்என்எஸ் போல் ரிவர் நேற்று முன்தினம் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றது.
மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைப் பொறிமுறையில் அனைத்துலக நீதிபதிகளை உள்ளடக்குவதற்கு சிறிலங்காவின் அரசியலமைப்பு அனுமதிக்கவில்லை என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன பௌத்த நிகழ்வு ஒன்றில் பங்கேற்பதற்காக இந்தியா செல்வதற்குத் திட்டமிட்டுள்ளார் என்று ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளியாகிய செய்தியை சிறிலங்கா அதிபர் செயலகம் நேற்று மறுத்துள்ளது.
இரத்மலானை விமான நிலையம் ஊடாக, கடந்த 50 ஆண்டுகளில் முதல் முறையாக அனைத்துலக விமானப் போக்குவரத்து இடம்பெறவுள்ளது.
கொழும்பில் தமிழ் இளைஞர்கள், மாணவர்கள் கடத்தப்பட்டு கப்பம் கோரப்பட்டு காணாமலாக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சிறிலங்கா கடற்படை அதிகாரியை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சபாநாயகரின் உத்தரவை மீறிய கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தனவை வெளியேற்றுவதற்காக சிறிலங்கா நாடாளுமன்றத்துக்கு இன்று காவல்துறையினர் அழைக்கப்பட்டனர்.