மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

வெள்ளைக்கொடி விவகாரத்தில் என்னைச் சிக்கவைக்க முனைகிறார் பொன்சேகா – கோத்தா

வெள்ளைக் கொடி விவகாரத்தில் தன்னை குற்றவாளியாக்குவதற்கு, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா முயற்சிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார் சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச.

இந்தியா – சிறிலங்கா இடையிலான எட்கா உடன்பாடு – சீனாவும் அக்கறை

இந்தியாவுடன் சிறிலங்கா பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்பாட்டை செய்து கொள்வது தொடர்பாக சீனா அக்கறை காண்பிப்பதாக சிறிலங்காவின் அனைத்துலக வர்த்தக, மூலோபாய அபிவிருத்தி அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தெரிவித்துள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் இடைநிறுத்தம்

மகசின் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தமிழ் அரசியல் கைதிகள் தமது போராட்டத்தை இன்று இடைநிறுத்த முடிவு செய்துள்ளனர்.

பொன்சேகா உரையாற்றிய போது ஓடி ஒளிந்தார் மகிந்த – வாயடைத்து நின்றனர் அவரது அணியினர்

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் முன்னாள் இராணுவத் தளபதியும், அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, நேற்று இறுதிப் போர் பற்றிய தகவல்களையும், ராஜபக்ச சகோதரர்களில் மோசடிகளையும் புட்டுப்புட்டு வைத்த போது. மகிந்த ஆதரவு அணியைச் சேர்ந்தவர்கள் வாயடைத்துப் போயிருந்தனர்.

போர் முடிந்ததாக அறிவித்த போது பிரபாகரன் உயிருடன் தான் இருந்தார் – சரத் பொன்சேகா

போர் முடிவுக்கு வந்துவிட்டதாக, சிறிலங்கா அதிபராக இருந்த மகிந்த ராஜபக்ச நாடாளுமன்றத்தில் அறிவித்த போது விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் உயிருடன் தான் இருந்தார், அதற்குப் பின்னரே அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டது என்று சிறிலங்கா அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

வெளியே வந்ததும் லெப்.யோசித ராஜபக்சவிடம் விசாரணை – ருவான் விஜேவர்த்தன

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள லெப்.யோசித ராஜபக்ச சிறையில் இருந்து வெளிவந்த பின்னர், சிறிலங்கா கடற்படையில் இருந்த போது, அவரது மோசடிகள், தன்னிச்சையான செயற்பாடுகள், மற்றும் செலவினங்கள் தொடர்பாக விசாரணைகளுக்கு உட்படுத்தப்படவுள்ளார்.

நாமலுக்குச் சொந்தமான நிறுவனத்தின் வங்கிக் கணக்குகளை முடக்கியது நீதிமன்றம்

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்குச் சொந்தமான நிறுவனத்தின் நான்கு வங்கிக் கணக்குகளை முடக்குமாறு, கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அஸ்கிரிய பீடாதிபதி நேற்றிரவு காலமானார்

சிறிலங்காவின் முக்கிய பௌத்த பீடங்களில் ஒன்றான அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர், வண.கலகம அட்டஸ்சி தேரர் (வயது94) நேற்றிரவு கண்டியில் காலமானார்.

அரசியலமைப்பு திருத்தம் குறித்து மக்கள் கருத்தறியும் குழு சம்பந்தனுடன் சந்திப்பு

அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக மக்கள் கருத்தறியும் குழு நேற்று எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த்  தசியக் கூட்டமைப்பின் தலைவருமான  இரா.சம்பந்தனை சந்தித்துக் கலந்துரையாடியது.

நாடாளுமன்றத்தை அரசியலமைப்பு பேரவையாக மாற்றும் பிரேரணைக்கு அங்கீகாரம்

புதிய அரசியலமைப்பை வரைவதற்காக நாடாளுமன்றத்தை அரசியலமைப்பு பேரவையாக மாற்றும் பிரேரணைக்கு சிறிலங்கா நாடாளுமன்றம் அங்கீகாரம் அளித்துள்ளது.