சிறிலங்காவில் பலியானோர் தொகை 164 பேராக அதிகரித்தது – மோரா சூறாவளியும் மிரட்டுகிறது
சிறிலங்காவில் கடந்த வியாழக்கிழமை தொடக்கம் கொட்டிய பெருமழையைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம், மற்றும் நிலச்சரிவுகளினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 164 ஆக அதிகரித்துள்ளது.
சிறிலங்காவில் கடந்த வியாழக்கிழமை தொடக்கம் கொட்டிய பெருமழையைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம், மற்றும் நிலச்சரிவுகளினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 164 ஆக அதிகரித்துள்ளது.
கடும் மழையினால் வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் சிறிலங்கா நாடாளுமன்றத்துக்குள் வெள்ளம் ஏற்படுவதைத் தடுப்பதற்கான அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சிறிலங்காவில் 2016ஆம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட பீடங்கள் மற்றும் திணைக்களங்களின் மூலம், பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 28,952 ஆக அதிகரித்துள்ளதாக சிறிலங்கா மத்திய வங்கியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சிறிலங்காவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அவசர மீட்பு மற்றும் மருத்துவ உதவிப் பணிகளில் இந்தியக் கடற்படையும் ஈடுபட்டுள்ளது.
சிறிலங்காவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தியா அனுப்பிய உதவிப் பொருட்களுடன் முதலாவது இந்திய கடற்படைக் கப்பல் இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
சிறிலங்காவின் தென்பகுதியில் கடும் மழையினால் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் 91 பேருக்கு மேல் பலியானதாகவும், 110 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடக்கு, கிழக்கில் சிறிலங்கா படையினர் வசமுள்ள மேலும் 3000 ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்திருப்பதாக, நெடுஞ்சாலைகள் மற்றும் உயர்கல்வி அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
வடக்கில் வேலையற்றோர் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், 1000 பட்டதாரிகளுக்கு சிறிலங்கா அரசாங்கம் நியமனங்களை வழங்கவுள்ளது.
எதிர்கால நகரங்கள் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் கேந்திர நகராக அபிவிருத்தி செய்யப்படும் என்று சிறிலங்காவின் பெருநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
கனடாவின் பசுபிக் மரைன் படைப்பிரிவு மற்றும் பசுபிக் கூட்டு அதிரடிப் படைப்பிரிவின் தளபதி றியர் அட்மிரல் ஆர்ட் மக் டொனால்ட் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சியைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.