மேலும்

ஓய்வுபெறும் சிறிலங்கா இராணுவத் தளபதி – பிரியாவிடை சந்திப்புகளில் பங்கேற்பு.

சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த றொட்ரிகோ,  பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர  மற்றும் பாதுகாப்புச் செயலர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்தா ஆகியோருடன் பிரியாவிடை  சந்திப்புகளை நடத்தியுள்ளார்.

சிறிலங்கா இராணுவத்தின் 25வது தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் லசந்த றொட்ரிகோ தனது பதவிக்காலத்தை  நிறைவு செய்யவுள்ள நிலையில், பாதுகாப்பு பிரதி அமைச்சர் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோரை அவர்களின் பணியகங்களில் சந்தித்துள்ளார்.

இந்த தனித்தனி சந்திப்புகளின்போது, இருவரும் லெப்டினன்ட் ஜெனரல் றொட்ரிகோவின் சிறப்புமிக்க இராணுவப் பணி, முன்மாதிரியான தலைமைத்துவம் மற்றும் நாட்டிற்காக அவர் அர்ப்பணிப்புடன் ஆற்றிய சேவையைப் பாராட்டியுள்ளனர்.

அவரது பதவிக் காலத்தில் சிறிலங்கா இராணுவத்தின் செயற்பாட்டுத் திறன்கள் மற்றும் தொழில்முறைத்தன்மையை மேம்படுத்துவதற்காக அவர் அர்ப்பணிப்புடன் பங்களிப்பை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *