மேலும்

ரஷ்யாவுடன் கூட்டுப் பயிற்சிக்காக புறப்பட்டுச் சென்றது சிறிலங்கா இராணுவ அணி

ரஷ்ய படையினருடனான கூட்டுப் பயிற்சிக்காக சிறிலங்கா இராணுவத்தின் 75 அதிகாரிகள் மத்தல விமான நிலையத்தில் இருந்து நேற்றிரவு புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

“வொல்வரின் பாத்” (Wolverine Path) என்ற பெயரில் இரு நாடுகளின் படைகளும், தந்திரோபாய பயங்கரவாத எதிர்ப்புப் பயிற்சியில் பங்கேற்கவுள்ளன.

இதற்காக 75 சிறிலங்கா படையினர், நேற்றிரவு ரஷ்யாவில் இருந்து வந்த இல்யூஷின் Il-76MD-90A இராணுவப் போக்குவரத்து விமானம் மூலம் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

இரு நாடுகளின் ஆயுதப் படைகளுக்கு இடையேயான தந்திரோபாய ஒத்துழைப்பு மற்றும் செயற்பாட்டு ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதே இந்தப் பயிற்சியின் நோக்கமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *